ஆர்.ராம்
ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இணைவு குறித்த பேச்சுக்கள் சிங்கப்பூரில் இடம்பெறவிருப்பதாக வெளிவந்துள்ள தகவல்களை நிரகாரித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார அவ்விதமான கருத்துக்கள் முழுப்பொய் என்றும் குறிப்பிட்டார்.
அதேநேரம், ஐக்கிய தேசிய கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் எங்குமே நடைபெறவில்லை என்றும் எதிர்காலத்திலும் அவ்விதமான பேச்சுக்கள் முன்னெடுக்கப்படப்போவதில்லை என்றும் அவர் வீரகேசரியிடம் கூறினார்.
ஐக்கிய தேசிய கட்சியையும் ஐக்கிய மக்கள் சக்தியையும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகள் இரு கட்சிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட உறுப்பினர்களின் பங்கேற்புடன் சிங்கப்பூரில் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் 16ஆம் திகதிக்கு முன்னதாக சாதகமான பதிலொன்று கிடைக்கும் என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் திருகோணமலையில் ஊடகவியலாளர் சந்திப்பை நடத்திக் கூறியிருந்தார்.
இந்நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையில் இணைவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன என்றும் சிங்கப்பூரில் அதன் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. உண்மையில் இது முழுப்பொய்யானவையாகும். நாங்கள் எந்தத் தரப்புடனும் இணைவது குறித்த பேச்சுக்களை முன்னெடுக்கவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தியுடன் நாளுக்கு நாள் முக்கிய அரசியல் தரப்பினர் இணைந்து வருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் மக்கள் செல்வாக்கின் அடிப்படையிலும் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதன் காரணத்தினாலும் எம்முடன் பலர் கைகோர்க்கின்றார்கள்.
எமது தரப்புக்கு பெருகிவரும் செல்வாக்கையும் ஆதரவினையும் கண்டு அச்சமடைந்துள்ள தரப்பினர் பொய்யான புனைகதைகளை இப்போது வெளியிட்டு வருகின்றார்கள். அதிலொன்று தான் சிங்கப்பூர் பேச்சுவார்த்தையாகும்.
ஐக்கிய மக்கள் சக்தியிடத்தில் பல்வேறு தரப்பினரும் இணைந்து செயற்படுவது குறித்த யோசனைகளை முன்வைக்கின்றார்கள். ஆனால் நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு கொள்கை நிலைப்பாட்டிலிருந்து விலகி நிற்கும் ஊழல், மோடிக் குற்றங்களுடன் தொடர்புடைய தரப்புக்களுடன் நாம் பேச்சுவார்த்தைகளுக்கு செல்வதற்கு விரும்பவில்லை.
எம்மைப் பொறுத்தவரையில் மக்களால் நிராகரிக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சியுடன் நாம் பேச்சுவார்த்தைக்கு செல்லவும் இல்லை. எதிர்காலத்தில் பேசப்போவதும் இல்லை. மக்கள் தீர்க்கமான முடிவுகளை வழங்குவதற்கு தயாராகிவிட்டார்கள்.
கள நிலைமைகள் அதனை தெளிவாக உணர்த்துகின்றன. ஆகவே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேர்தலுக்கு உரிய காலத்தில் செல்ல வேண்டும். அதுவே எமது பகிரங்கக் கோரிக்கையாகும். நாம் எந்தத் தேர்தலுக்கும் தயாராகவே உள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM