மோடி இன்று மீண்டும் 3வது முறையாக பிரதமராக பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் தான் மோடியுடன் இன்று மத்திய அமைச்சராகப்போகும் எம்பிக்களுக்கு அவர் இன்று காலை 11.30 மணிக்கு தேநீர் விருந்து அளிக்கிறார். இந்த தேநீர் விருந்தால் மத்திய அமைச்சராகப்போகும் எம்பிக்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.
கடந்த 2014, 2019 ஆண்டுகளை தொடர்ந்து மீண்டும் 3வது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் தான் அவருடைய மத்திய அமைச்சரவையில் இடம்பெறும் எம்பிக்கள் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் தான் முதற்கட்டமாக இன்று பிரதமர் மோடியுடன் 30 பேர் மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் இன்று மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள எம்பிக்களுக்கு டெல்லியில் உள்ள இல்லத்தில் வைத்து பிரதமர் மோடி தேநீர் விருந்து வழங்க உள்ளார்.
இந்த தேநீர் விருந்தில் இன்று மத்திய அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ள எம்பிக்கள் பங்கேற்க உள்ளனர். அதன்படி அமித்ஷா, ராஜ்நாத் சிங், அர்ஜுன் ராம் மேக்வால், பியூஸ் கோயல், ஜோதிர்ராதித்ய சிந்தியா உள்ளிட்டோருக்குஅழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் மீண்டும் அவர்கள் மத்தியஅமைச்சர்களாக பொறுப்பேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கூட்டணி கட்சிகளை பொறுத்தமட்டில் கர்நாடகா முன்னாள் முதல்வரும், ஜேடிஎஸ் தலைவருமான குமாரசாமி, பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியை சேர்ந்த ராம்நாத் தாகூர், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் எம்பிக்களான ராம் மோகன் நாயுடு, பெம்மாசானி சந்திரசேகர், சர்பானந்தா சோனோவால் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM