(நெவில் அன்தனி)
தென் ஆபிரிக்கா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதும் டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டி நியூயோர்க் நசவ் கன்ட்றி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஆரம்பமாகியுள்ளது.
9ஆவது உலகக் கிண்ண அத்தியாயத்தில் தத்தமது ஆரம்பப் போட்டிகளில் இலங்கையை தென் ஆபிரிக்காவும் நேபாளத்தை நெதர்லாந்தும் வெற்றிகொண்டிருந்தன.
தென் ஆபிரிக்காவையும் நெதர்லாந்தையும் ஒப்பிட்டால் தென் ஆபிரிக்கா பலம்வாய்ந்த அணி என்றே கூறத்தோன்றுகிறது.
ஆனால், இரண்டு அணிகளும் கடைசியாக மோதிக்கொண்ட இரண்டு வகையான உலகக் கிண்ண கிரிகெட் போட்டிகளில் தென் ஆபிரிக்காவை அதிர்ச்சி அடையச் செய்யும் வகையில் நெதர்தலாந்து வெற்றிபெற்றிருந்தது.
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 13 ஓட்டங்களால் வெற்றிபெற்ற நெதர்லாந்து, இந்தியாவில் 2023இல் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கிண்ணப் போட்டியில் 38 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.
இந்த இரண்டு போட்டிகளிலும் விளையாடிய பலர் இந்த வருட அணிகளிலும் இடம்பெறுகின்றனர்.
எனவே இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முறையும் நெதர்லாந்து வெற்றிபெற்றால் டி குழுவுக்கான அணிகள் நிலையில் முதலிடத்தைப் பெறுவதுடன் இலங்கையும் பங்களாதேஷும் பலத்த நெருக்கடியை எதிர்கொள்ளும்.
ஆனால், அதனை நெதர்லாந்து சாதிக்குமா என்பது இன்று தெரியவரும்.
இது இவ்வாறிருக்க, தென் ஆபிரிக்கா தனது ஆரம்பப் போட்டியில் விளையாடிய அதே மைதானத்தில் மீண்டும் விளையாடுவதால் ஆடுகளத்தின் தன்மையை நன்கு புரிந்துகொண்டிருக்கும். ஆனால் முதல் தடவையாக இந்த ஆடுகளத்தில் விளையாடவுள்ள நெதர்லாந்து தடுமாற்றத்தை எதிர்கொள் வாய்ப்புள்ளது
எனினும் நெதர்லாந்து அணியினர் எத்தகைய ஆடுகளங்களிலும் திறமையாக விளையாடக்கூடியவர்கள் என்பதால் தென் ஆபிரிக்கா அழுதத்தத்தை எதிர்கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அணிகள்
தென் ஆபிரிக்கா: குவின்டன் டி கொக், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ஏய்டன் மார்க்ராம் (தலைவர்), ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், ஹென்றிச் க்ளாசன், டேவிட் மில்லர், மாக்கோ ஜென்சன், கேஷப் மஹாராஜ், கெகிசோ ரபாடா, ஓட்நீல் பார்ட்மன், அன்றிச் நோக்கியா.
நெதர்லாந்து: மைக்கல் லெவிட், மெக்ஸ் ஓ'தௌட், விக்ரம்ஜித் சிங், சைப்ராண்ட் எங்க்ள்ப்ரெச், ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (தலைவர்), பாஸ் டி லீட், டேஜா நிதாமானுரு, லோகன் வென் பீக், டிம் ப்றிங்க்ள், போல் வென் மீக்கரன், விவியன் கிங்மா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM