உலக புகையிலை தடுப்பு தினத்தை கொண்டாடும் தேசிய நிகழ்வு நேற்று (07) கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் 2024ஆம் ஆண்டு உலக புகையிலை தடுப்பு தினத்துக்கான விருது சுகாதார அமைச்சர் Dr.ரமேஷ் பத்திரனவினால் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்துக்கு வழங்கப்பட்டது.
இதில் சுகாதார இராஜாங்க அமைச்சர் Dr. சீதா அரம்பேபொல, உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான நிரந்தர பிரதிநிதி அலகா சிங், சுகாதாரச் செயலாளர் டாக்டர் பி.ஜி. மஹிபால, புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான தேசிய அதிகார சபையின் (NATA) தலைவர் டொக்டர் அலன் லுடோவிக், சுகாதார அமைச்சின் தொற்றாநோய்கள் (NCD) பிரிவின் பணிப்பாளர் Dr.சமிந்தி சமரகோன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் பிரிவினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) ஒவ்வொரு ஆண்டும் புகையிலை கட்டுப்பாட்டுத் துறையில் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களின் சிறந்த பங்களிப்பை புகையிலை தடுப்பு தின விருதுகள் மூலம் அங்கீகரிக்கின்றது.
அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான விருது மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்துக்கு (ADIC) விருது வழங்கப்பட்டுள்ளது.
புகையிலை பாவனையினால் ஏற்படும் விளைவுகள் மற்றும் புகையிலை நிறுவனத்தின் தந்திரோபாயங்கள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டுவதற்காக உலக சுகாதார நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட உலகளாவிய திட்டம் உலக புகைத்தல் தடுப்பு தினமாகும். இத்தினமானது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ஆம் திகதி உலக புகையிலை தடுப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, இந்த வருடத்தின் தொனிப்பொருளில் “புகையிலை கைத்தொழிலின் தந்திரோபாயங்களிலிருந்து சிறுவர்களையும் இளைஞர்களையும் பாதுகாப்போம்” என்ற தொனிப்பொருளின் கீழ் பல்வேறு செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையமானது கடந்த 30க்கும் மேற்பட்ட ஆண்டுகளாக புகையிலை பாவனையையும் விநியோகத்தையும் கட்டுப்படுத்துவதற்காகவும் முறையான கொள்கைகளை உருவாக்குவதற்கும் பல்வேறு செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
இவ்வருடம் உலக சுகாதார ஸ்தாபனத்தினால் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்துக்கு கிடைக்கப்பெற்ற இவ்விருதினை புகையிலை தடுப்புக்காக தங்களை அர்ப்பணித்துள்ள அனைத்து தரப்பினருக்கும் கிடைத்த ஒரு மதிப்புமிக்க அங்கீகாரம் என்பதை வலியுறுத்துவதில் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் மகிழ்ச்சி அடைகிறது.
சம்பத் த சேரம்,
நிறைவேற்றுப் பணிப்பாளர்,
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM