எம்மில் பலருக்கும் தங்களது நாளாந்த வாழ்க்கையின்போது ஏதேனும் இடையூறுகளோ தடைகளோ தாமதங்களோ ஏற்பட்டால், தங்களை தாங்களே 'எல்லாம் வாங்கி வந்த வரம் அப்படி..' என்றும், 'நான் செஞ்ச புண்ணியம் அவ்வளவுதான்' என்றும் புலம்புவதை காணலாம். சிலரால் சில தருணங்களில் நினைத்தாலும் அவர்களால் புண்ணியம் தரும் காரியங்களை செய்ய இயலாது. அதே தருணத்தில் சிலரால் புண்ணிய காரியங்களை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்க முடியும். இது எம்மில் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். புண்ணியம் செய்வதற்கும் உங்களுடைய ஜாதகத்தில் ஸ்ரீ நாகா யோகம் எனும் யோகம் இருக்க வேண்டும்.
உங்களது ஜாதகத்தில் லக்னத்திலோ அல்லது லக்னத்திற்கு கேந்திரத்திலோ சூரியன் + சுக்கிரன் + புதன் ஆகிய மூன்று கிரகங்களும் இணைவு பெற்றிருந்தால், அது ஸ்ரீ நாக யோகம் அருளும் ஜாதகம் என உறுதியாக சொல்லலாம். இவர்களுக்கு புகழும் பதவியும் தேடி வரும். இவர்கள் செய்யும் காரியங்கள் அனைத்திலும் புண்ணியம் இவர்களை சூட்சுமமாக சென்றடையும். சுருக்கமாக இவர்கள் கடந்த பிறவியில் புண்ணியம் செய்தவர்களாக இருக்க வேண்டும்.
இந்தப் பிறவியில் புண்ணியம் செய்வதற்கும், புண்ணியம் தரும் செயல்களை செய்வதற்கும், புண்ணியம் செய்திருக்க வேண்டும் என்பர். அதாவது புண்ணிய காரியங்கள் செய்வதற்கான அம்சத்தில் பிறந்திருக்க வேண்டும்.
இவர்கள் தொடர்ந்து நாக தேவதைகளையும் ஸ்ரீ நாகாத்தம்மனையும் வழிபட தொடங்கினால், அதிலும் குறிப்பாக பிரத்யேகமான முறையிலான வழிபாட்டில் ஈடுபட்டால், புண்ணிய காரியங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு, அதனூடாக புண்ணியத்தை ஈட்டி, புண்ணியவான்களாக வாழலாம். இவர்களுக்கு செல்வ நிலை உயர்வதுடன் பதவியும் புகழும் ஆயுள் முழுவதும் நீடித்து நிலைத்து நிற்கும்.
குறிப்பாக செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் நாக தேவதைகளையும், நாகாத்தம்மனையும் நாகங்கள் தொடர்பான கடவுள்களையும் இறைவியையும் வழிபடத் தொடங்கினால் சுப பலன்கள் கிட்டும்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM