மலையினின்று விழும் நீர்வீழ்ச்சியை காண்பது கண்ணுக்கு இன்பம்; நீர்வீழ்ச்சில் நீராடுவது உடலுக்கு இன்பம். எனவேதான் சுற்றுலா பயணிகளை நீர்வீழ்ச்சி அதிகம் கவர்ந்து இழுக்கிறது.
சீனாவின் மத்திய ஹெனான் மாகாணத்தில் 312 மீற்றர் உயரமுடைய பிரபலமான யுண்டாய் நீர்வீழ்ச்சி அநை்துள்ளது.
யுண்டாய் மலைப் பூங்காவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க் என அறிவிக்கப்பட்ட இடமாகும்.
அதாவது, பூமியில் அரிதாக கண்டறியப்படும் புவியியல் அமைப்புகள் கொண்ட இடத்திற்கு தான் ஜியோபார்க் என்ற அந்தஸ்து வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இலட்சக்கணக்கான மக்கள் யுண்டாய் நீர்வீழ்ச்சியை பார்வையிட வருகின்றனர்.
இந்நிலையில், பிரபலமான யுண்தாய் நீர்வீழ்ச்சியின் பின்னணியில் ஒரு மலை உச்சியிலிருந்து ராட்சச குழாய் மூலம் நீர் கொட்டுவதை காட்டும் காணொளி ஒன்று, சீன சமூக ஊடக தளத்தில் பகிரப்பட்டது.
இந்த காணொளி வைரலான பிறகு, சுற்றுலாப் பயணிகளுக்கு சிறந்த அனுபவத்திற்காக மழை இல்லாததால், வறட்சி காலங்களில் "சிறிய விரிவாக்கம்" செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தற்போது அந்த 'செயற்கை' நீர்வீழ்ச்சி ஆய்வுக்கு உட்பட்டுள்ளது.
இந்த காணொளியை அங்கே வந்த சுற்றுலா பயணி ஒருவர் டிரோன் கமரா பயன்படுத்தி, காணொளி எடுத்துள்ளார்.
இந்த வீடியோ கடந்த திங்கட்கிழமை சமூக ஊடகங்களில் பகிரப்பட்டபோது 70,000 பேர் லைக் செய்து இருந்தனர்.
இது வெய்போவில் 14 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும், டூயினில் கிட்டத்தட்ட 10 மில்லியன் பார்வைகளையும் பெற்றது - இது போன்ற ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது, உள்ளூர் அரசாங்க அதிகாரிகளை விசாரிக்க பூங்காவிற்கு அனுப்பப்பட்டது.
சீனாவில் பிரபலமான நீர்வீழ்ச்சிகளுக்கு செயற்கை முறையில் நீர் வழங்கும் இது முறையான நடைபெற்ற சம்பவம் அல்ல.
தென்மேற்கு Guizhou மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஹுவாங்குவோசு (Huangguoshu) நீர்வீழ்ச்சியின் நீர் வரட்சியினால் 2006 ஆம் ஆண்டு வற்றியபோது வற்று அருகிலுள்ள அணையில் இருந்து நீரை திருப்பி இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM