கேப்­பாப்­பு­லவில் அமைந்­துள்ள 279 ஏக்கர் காணிகள் மே மாதம் 15ஆம் திகதி விடு­விக்­கப்­ப­டு­மென சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு, புனர்­வாழ்­வ­ளிப்பு, மீள்­கு­டி­யேற்றம் மற்றும் இந்­து­மத அலு­வல்கள் அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன் தெரி­வித்தார்.

 

இவ்­வி­டயம் தொடர்பில் அவர் விடுத்­துள்ள ஊடக அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

எனக்கும் பாது­காப்பு அமைச்சின் செய­லா­ள­ருக்கும் இடையில் கடந்த வாரம் நடை­பெற்ற பேச்­சு­வார்­தையின் விளை­வாக பாது­காப்பு அமைச்சு கேப்­பாப்­பு­லவில் உள்ள 279 ஏக்கர் காணி­களை மே மாதம் 15ஆம் திக­திக்கு முன்னர் விடு­விப்­ப­தாக தெரி­வித்­துள்ளார்.

அதன் பிர­காரம் 248 ஏக்கர் அரச காணிகள் கேப்­பாப்­பு­லவில் இருந்தும்இ 31 ஏக்கர்  தனியார் காணிகள் சீனி­யா­மோட்­டையில் இருந்தும் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளன.

பாது­காப்பு அமைச்சின் கோரிக்­கைக்­க­மைய ஐந்து மில்­லியன் ரூபா நிதி எமது மீள்­கு­டி­யேற்ற அமைச்­சினால் ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­மி­டத்து மேற்­கு­றிப்­பிட்ட திக­தியில் விடு­விக்­கப்­ப­டா­துள்ள 189 ஏக்கர் தனியார் காணி­களும் ஒரு மாத காலத்­துக்குள் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளன.

மேற்­கு­றிப்­பி­டப்­பட்­டதன் பிர­காரம் மொத்­த­மாக 468 ஏக்கர் காணிகள் பாது­காப்பு அமைச்சின் மூல­மாக விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளன இக்காணிகள் ஜனாதிபதியினதும் பிரதம மந்திரியினதும் உத்தரவின் பிரகாரம் நடைமுறைப்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.