இலங்கை - பங்­க­ளாதேஷ் அணிகள் மோதும் மூன்­றா­வதும் கடை­சி­யு­மான ஒருநாள் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதா­னத்தில் நடை­பெ­ற­வுள்­ளது. இப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.

இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்­ப­மா­க­வுள்ள இந்தப் போட்­டியில் இலங்கை அணி கட்­டாயம் வெற்­றி­பெற்றே ஆக வேண்டும். அப்­படி வெற்­றி­பெற்­றாலும் தொடரை வெல்ல முடி­யாது என்­றாலும் கூட தொடரை இழக்­காமல் சம­நி­லையில் முடிக்க முடியும்.

இலங்­கைக்கு சுற்றுப் பயணம் மேற்­கொண்­டுள்ள பங்­க­ளாதேஷ் அணி இலங்­கை­யுடன் மூன்று போட்­டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளை­யா­டு­கி­றது.

இதன் முதல் போட்­டியில் 90 ஓட்­டங்­களால் பங்­க­ளாதேஷ் அணி வெற்­றி­பெற்று தொடரில் முன்­னிலை பெற்­றி­ருந்த நிலையில், இரண்­டா­வது போட்டி மழை கார­ண­மாக வெற்­றி­தோல்­வி­யின்றி நிறை­வ­டைந்­தது.

இந்­நி­லையில் இந்தத் தொடரின் மூன்­றா­வதும் கடை­சி­யு­மான போட்­டியே இன்று நடை­பெ­ற­வுள்­ளது. இப் போட்டியில் இரு அணிகளும் வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்போடு களமிறங்குவதால் இன்றைய போட்டி விறுவிறுப்பாக அமையும்.