(நெவில் அன்தனி)
நியூயோர்க் நசவ் கன்ட்றி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் சற்று நேரத்துக்கு முன்னர் நிறைவடைந்த ஏ குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண போட்டியில் அயர்லாந்தை 12 ஓட்டங்களால் கனடா வெற்றிகொண்டது.
இந்த வருட உலகக் கிண்ணப் போட்டியில் அறிமுகமான கனடா ஈட்டிய முதலாவது வெற்றி இதுவாகும்.
இரண்டு அணிகளும் மந்தகதியில் ஓட்டங்களைப் பெற்றதால் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்தின் 16ஆவது ஓவர்வரை ஆட்டத்தில் சுவாரஸ்யம் இருக்கவில்லை.
ஆனால், மார்க் அடயாரும் ஜோர்ஜ் டொக்ரெல்லும் 17ஆவது ஓவரிலிருந்து விளாசி அடிக்கத் தொடங்கியதும் போட்டியில் ஓரளவு விறுவிறுப்பு ஏற்பட்டது. அவர்கள் இருவரது அதிரடிகள் காலம் தாழ்த்தி ஆரம்பிக்கப்பட்டதால் கனடாவின் வெற்றியை அவர்களால் தடுக்க முடியாமல் போனது.
கனடாவினால் நிர்ணியிக்கப்பட்ட சுமாரான 138 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
மிக மோசமாக துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 11ஆவது ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 53 ஓட்டங்களை மட்டும் பெற்றிருந்தது.
முன்வரிசையில் அண்டி பெல்பேர்னி (17), லோக்கன் டக்கர் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
13ஆவது ஓவரில் மேலும் ஒரு விக்கெட் விழ மொத்த எண்ணிக்கை வெறும் 59 ஓட்டங்களாக இருந்தது.
ஜோர்ஜ் டொக்ரெல்லும் மார்க் அடாயரும் 7ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்து 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அயர்லாந்துக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
ஆனால், கடைசி ஓவரில் மார்க் அடயார் 34 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க அயர்லாந்தின் வெற்றிக் கனவு கலைந்து போனது.
ஜோர்ஜ் டொக்ரெல் 30 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் ஜெரமி கோர்டன் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டிலொன் ஹேலிகர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட கனடா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 137 ஓட்டங்களைப் பெற்றது.
நிக்கலஸ் கேர்ட்டன், ஷ்ரேயாஸ் மொவ்வா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 75 ஓட்டங்களே கனடாவை கௌரவமான நிலையில் இட்டது.
நிக்கலஸ் கேர்ட்டன் 49 ஓட்டங்களையும் ஷ்ரேயாஸ் ஐயர் 37 ஓட்டங்களையும் பெற்றனர்.
அவர்களைவிட பர்கத் சிங் (18), ஆரோன் ஜோன்சன் (14) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர்.
பந்துவீச்சில் பெறி மெக்காத்தி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் க்ரெய்க் யங் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: நிக்கலஸ் கேர்ட்டன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM