முதல் காலாண்டில் 4 பில்லியன் டொலர் கடன்களை அரசாங்கம் பெற்றுள்ளது - விஜித ஹேரத்

Published By: Vishnu

07 Jun, 2024 | 08:23 PM
image

2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மாத்திரம் 4 பில்லியன் டொலர் கடன்களை பெற்று அரச கடன்களை  100 பில்லியன் டொலர்களாக அரசாங்கம் உயர்த்தியுள்ளது. சர்வதேச கடன் மறுசீரமைப்பு என்பது கானல் நீராகவே காணப்படுகிறது எனத் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (07) இடம்பெற்ற அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தை முன்வைத்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது.சர்வதேச நாணய நிதியத்துடனான செயற்திட்டத்தின் போது  தேசிய கடன்களை மறுசீரமைக்கப் போவதில்லை என்று  குறிப்பிடப்பட்டது.ஆனால் தேசிய கடன்கள் தான் முதலாவதாக மறுசீரமைக்கப்பட்டது.

வெளிநாட்டு அரசமுறை கடன்களை இன்று மறுசீரமைப்பதாகவும்,நாளை மறுசீரமைப்பதாகவும்,அடுத்த மாதம் மறுசீரமைப்பதாகவும் அரசாங்கம் குறிப்பிடுகிறது.ஆனால் ஒரு டொலர் கடன் கூட இதுவரை மறுசீரமைக்கப்படவில்லை.இதுதான் உண்மை.

இலங்கையின் மொத்த கடன் பெறுமதி 100 பில்லியன் டொலர் என்று அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு விட்டோம்,பணவீக்கம் குறைவடைந்து விட்டது என்று அரசாங்கம் பெருமை கொள்கிறது.ஆனால் கடன் நிலைமை பற்றி ஏதும் குறிப்பிடுவதில்லை.

2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மாத்திரம்  அரசாங்கம் 4 பில்லியன் டொலர் தேசிய கடன்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. இவ்வாறான நிலையில் அரசமுறை கடன் 100 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.

இலங்கையின் பிரதான இரு தரப்பு கடன் வழங்குநர்களாக இந்தியா,சீனா ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக போட்டித்தன்மையினால் இலங்கையின் பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளது. சர்வதேச கடன் மறுசீரமைப்புக்கு இவ்விரு நாடுகளும் சாதகமான தீர்மானத்துக்கு வரவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2025ஆம் ஆண்டுக்கான 79ஆவது வரவு -...

2025-02-17 13:29:05
news-image

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு “நோயை குணப்படுத்தக்கூடிய...

2025-02-17 13:26:22
news-image

2 கிலோ கஞ்சா போதைப்பொருளுடன் ஒருவர்...

2025-02-17 13:04:29
news-image

தம்மென்னாவ வனப்பகுதியில் 8,516 கஞ்சா செடிகள்...

2025-02-17 12:55:58
news-image

கடும் வெப்பம் ; விளையாட்டு பயிற்சிகளில்...

2025-02-17 12:42:39
news-image

அநுராதபுரத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

2025-02-17 12:21:22
news-image

வாடகை வாகனத்தில் பயணிக்கும் போர்வையில் கொள்ளை...

2025-02-17 12:07:47
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-02-17 12:33:31
news-image

மாலைத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல்...

2025-02-17 13:39:08
news-image

பாமன்கடையில் மின் கம்பத்தில் மோதி கார்...

2025-02-17 12:05:26
news-image

சஜித் தலைமையில் சகல எதிர்க்கட்சித் தலைவர்களும்...

2025-02-17 12:01:13
news-image

இராட்டினத்தில் விளையாடிக்கொண்டிருந்த இருவர் கீழே வீழ்ந்து...

2025-02-17 11:33:45