ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 சுற்றைக் குறிவைத்து மோதவுள்ள இலங்கை - பங்களாதேஷ் அணிகள் 

Published By: Vishnu

07 Jun, 2024 | 07:46 PM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் கூட்டாக நடத்தப்படும் 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் சுப்பர் 8 சுற்றுக்கு செல்வதைக் குறிவைத்து இலங்கையும் பங்களாதேஷும் டி குழு போட்டியில் மோதவுள்ளன.

இப் போட்டி டலாஸ், க்ராண்ட் ப்ரெய்ரீ விளையாட்டரங்கில் இலங்கை நேரப்படி சனிக்கிழமை (08) காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்த இரண்டு அணிகளும் சுப்பர் 8 சுற்றை குறிவைத்து விளையாடவுள்ளதால் புதிதாக உருவாகியுள்ள பகைமையை இரண்டு அணிகளும் போட்டி முடியும்வரை புறந்தள்ளி வைக்கும் என கருதப்படுகிறது.

தென் ஆபிரிக்காவுடனான தனது ஆரம்பப் போட்டியில் தோல்வி அடைந்த இலங்கை, எஞ்சிய 3 போட்டிகளிலும் வெற்றிபேற்றே ஆக வெண்டும் என்ற கட்டாயத்தில் தனது இரண்டாவது போட்டியில் பங்களாதேஷை எதிர்கொள்ளவுள்ளது.

இதன் காரணமாக இலங்கை அணி கடும் நெருக்கடியையும் அழுத்தத்தையும் எதிர்கொள்ளவுள்ளது.

மறுபக்கத்தில் தனது முதலாவது போட்டியில் பங்களாதேஷ் விளையாடவுள்ளதால் அவ்வணி எவ்வித அழுத்தத்தையும் எதிர்கொள்ளாது.

இலங்கை அணியைப் பொறுத்தமட்டில் தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியின்போது துடுப்பாட்டத்தில் இழைத்த தவறுகளை மீண்டும் இழைக்காமல் இருப்பது அவசியமாகும்.

தென் ஆபிரிக்க பந்துவீச்சாளர்களின் எகிறிப் பாய்ந்த, மேலெழுந்த பந்துகளை வெறுமனே களத்தடுப்பாளர்கள் இருக்கும் பகுதிகளுக்கு விசுக்கி அடித்தே இலங்கை வீரர்கள் அநாவசியமாக விக்கெட்களைத் தாரை வார்த்தனர்.

இதன் காரணமாக சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் தனது மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையான 77 ஓட்டங்களுக்கு இலங்கை சுருண்டது. போதாக்குறைக்கு விக்கெட்கள் சரிவதை தன்னால் தடுக்க முடியும் என்ற எண்ணத்தில் துடுப்பாட்ட வரிசையில் தன்னை உயர்த்திக்கொண்ட அணித் தலைவர் வனிந்து ஹசரங்க அநாவசியமாக முன்னால் பாய்ந் து   பந்தை அடிக்க விளைந்து விக்கெட்டை தாரை வார்த்தார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஐக்கிய அமெரிக்க துடுப்பாட்ட வீரர்கள் எவ்வளவு திறமையாக துடுப்பெடுத்தாடினார்கள் என்பதை பாடமாகக் கொண்டு இலங்கை வீரர்கள் பங்களாதேஷுடனான போட்டியை எதிர்கொள்ள வெண்டும்.

ஒரு போட்டியில் எத்தனை பவுண்டறிகள், எத்தனை சிக்ஸ்கள் அடிக்க வேண்டும் என்பதையும் களத்தடுப்பாளர்கள் இல்லாத வெற்றிடங்களுக்கு பந்தை அடித்து ஒற்றைகளை இரட்டைகளாக்குவதையும் நினைவில் வைத்து திட்டமிட்டு துடுப்பெடுத்தாடினால் இலங்கையினால் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற முடியும்.

இது இவ்வாறிருக்க, இலங்கையும் பங்களாதே{ம் விளையாடியுள்ள 16 சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் 11 - 5 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை முன்னிலை வகிக்கிறது.

ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் பங்களாதேஷுடன் விளையாடிய இரண்டு சந்தர்ப்பங்களிலும் இலங்கை வெற்றிபெற்றிருந்தது.

ஜொஹானெஸ்பேர்கில் 2007இல் 64 ஓட்டங்களாலும் ஷார்ஜாவில் 2021இல் 5 விக்கெட்களாலும் பங்களாதேஷை இலங்கை வெற்றிகொண்டிருந்தது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இந்த பேறுபேறுகளின் அடிப்படையில் இலங்கை அணிக்கு சாதகமான முடிவு கிட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் ஐக்கிய அமெரிக்காவிடம் சர்வதேச ரி20 தொடரில் 1 - 2 என்ற ஆட்டக் கணக்கில் தோல்வி அடைந்த பங்களாதேஷ், என்ன விலைகொடுத்தேனும் இலங்கையை வீழ்த்த முயற்சிக்கும்.

எனவே, இலங்கை அணியினர் சரியான வியூகங்களை அமைத்து, சகலதுறைகளிலும் முழுத் திறமையை வெளிப்படுத்துவது அவசியமாகும்.

அணிகள்

இலங்கை: பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க (தலைவர்), மஹீஷ் தீக்ஷன அல்லது துனித் வெல்லாலகே, நுவன் துஷார, மதீஷ பத்திரண.

பங்களாதேஷ்: தன்ஸித் ஹசன், சௌம்யா சர்க்கார், நஜிமுல் ஹொசெய்ன் ஷன்டோ (தலைவர்), தௌஹித் ரிதோய், ஷக்கிப் அல் ஹசன், மஹ்முதுல்லா, ஜாக்கர் அலி அல்லது லிட்டன் தாஸ், மெஹெதி ஹசன், ரிஷாத் ஹொசெயன், தன்ஸிம் ஹசன், முஸ்தாபிஸுர் ரஹ்மான்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அகில இலங்கை பாடசாலைகள் நீச்சல் போட்டியில் ...

2024-07-19 16:06:50
news-image

ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளுக்கு...

2024-07-19 14:47:26
news-image

ஆர்ஜென்டீனவில் பாலியல் குற்றச்சாட்டில் கைதான பிரெஞ்சு...

2024-07-19 15:10:11
news-image

இலங்கை வரும் இந்திய ஒரு நாள்...

2024-07-19 12:00:51
news-image

கண்டி பெல்கன்ஸ் அணிக்கு கைகொடுத்த கமிந்து,...

2024-07-19 01:54:56
news-image

எல்.பி.எல். இறுதிப் போட்டியில் கோல் மார்வல்ஸ்;...

2024-07-19 01:48:33
news-image

அண்டர்சனுக்கு பதிலாக மார்க் வூட்

2024-07-18 16:17:16
news-image

ஜப்பானிய தேசிய கால்பந்தாட்ட வீரர் பாலியல்...

2024-07-18 16:08:49
news-image

20 வயதுக்குட்பட்ட மத்திய ஆசிய பெண்கள் ...

2024-07-18 15:59:19
news-image

மேற்கு ஆசிய நேரக் கட்டுப்பாடு செஸ்...

2024-07-18 15:54:48
news-image

கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கிடையே கபடி போட்டி...

2024-07-18 13:28:36
news-image

மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்...

2024-07-18 00:38:34