பன்முகத்தன்மையைக் மற்றும் இலங்கையில் தமிழ் பேசும் தொழில்முனைவோரை மேம்படுத்தவும் முன்னணி டிஜிட்டல் பொது உறவு நிறுவனமான GoodPRஇனால் ஏற்பாடு செய்யப்பட்ட, இலங்கையின் தமிழ் பேசும் வணிக சமூகத்தினரின் உள்ளடக்கத்தையும் கூட்டு வளர்ச்சியை ஊக்குவித்தலினையும் இலக்காகக் கொண்ட ஒரு நுண்ணறிவு கலந்த விவாதம் மற்றும் கற்றல், வலையமைப்பாக்க வாய்ப்புகளை வழங்கும் ஒரு தனித்துவமான கலந்துரையாடல் Tamilpreneur மே மாதம் 30ஆம் திகதி கொழும்பு Hatch Worksஇல் மாலை 6.30 மணி முதல் நடைபெற்றது.
இக்கலந்துரையாடல் குழுவில் நான்கு புகழ்பெற்ற தமிழ் பேச்சாளர்கள் கலந்துகொண்டனர். இக்குழுவில் Cliphs Trading நிர்வாக இயக்குனர் அருணன் வேங்கடாசலம், சர்வதேச பெருநிறுவன பயிற்சியாளர், வாழ்க்கை / நிர்வாக பயிற்சியாளர், பேச்சளர், விரிவுரையாளர், Colombo Fashion Council தலைவர் மற்றும் ஆராய்ச்சியாளர், ஐன்ஹாரன் விவேகானந்தன், தொழில்முனைவோர் மற்றும் ArcheloLAB நிறுவனர் மற்றும் ICBSஇன் கல்வி தலைவர் மற்றும் நாட்டின் முன்னணி பொருளாதார நிபுணர் வைத்தியர் கணேஷமூர்த்தி ஆகியோர் அவர்களுடைய துறைகளில் பெற்ற அனுபவம் மற்றும் மதிப்புமிக்க கற்றல்களை பகிர்ந்துகொண்டனர்.
இக்கலந்துரையாடல் பயிற்சி ஆய்வகத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சிவலதா சிவசுந்தரத்தினால் நிர்வகிக்கப்பட்டதுடன் பணியிடத்தில் பன்முகத்தன்மையின் முக்கியத்துவத்தையும் தனிப்பட்ட நிகழ்வுகள், புதுமை மற்றும் வெற்றியைத் தூண்டும் சூழல்களை உருவாக்குவதற்கான நடைமுறை உத்திகளும் கலந்துரையாடப்பட்டன. கலாசார நுணுக்கங்களை வழிசெலுத்துவது முதல் மாறுபட்ட கண்ணோட்டங்களை மேம்படுத்துவது வரை, இந்த நிகழ்வு பங்கேற்பாளர்களுக்கு செயலூக்கமான செயற்பாடுகளுடன் நடைபெற்றது.
"Tamilpremeur பன்முகத்தன்மையினை கொண்டாடக்கூடிய, தமிழ் பேசும் வணிக சமூகத்துக்குள் கூட்டு வளர்ச்சியை வளர்ப்பதற்கான ஒரு தளமாகும்" என தேவ் குறிப்பிட்டார்.
"பல்வேறு துறைகளைச் சேர்ந்த திறமையான நிபுணர்களை ஒன்றிணைப்பதன் மூலம் இன்றைய போட்டி நிலப்பரப்பில் செழிக்க தேவையான கருவிகள் மற்றும் நுண்ணறிவுகளுடன் தொழில்முனைவோர் மற்றும் வணிகத் தலைவர்களை ஊக்குவிக்கவும் சித்தப்படுத்தவும் முடிந்தது" என்றும் GoodPR நிறுவனத்தின் பிரதிநிதி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிகழ்வு ஒரு ஊக்கமளிக்கும் மற்றும் சிந்தனையைத் தூண்டும் அனுபவமாக காணப்பட்டதுடன் பங்கேற்பாளர்களை உள்ளடக்கிய மற்றும் பல்வேறு கலாசார புரிதலை ஊக்குவித்ததுடன் வணிக வெற்றிக்கான புதிய யோசனைகள் மற்றும் அணுகுமுறைகளை ஆராய ஊக்குவித்தது.
இந்த நிகழ்வின் நுண்ணறிவு கலந்த விவாதங்கள் மற்றும் சமமான எண்ணம் கொண்ட நிபுணர்களுடன் இணையும் வாய்ப்பினை வழங்கியமையை பங்கேற்பாளர்கள் பாராட்டினர்.
"Tamilpreneur அனுபவம் வாய்ந்த தலைவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவும், உள்ளடங்கிய பணியிடங்களை உருவாக்குவதற்கான நடைமுறை உத்திகளைப் பெறவும் எங்களுக்கு ஒரு பெறுமதியான தளத்தை வழங்கியது" என்றும் "இலங்கையில் மிகவும் மாறுபட்ட மற்றும் உள்ளடக்கிய வணிக சூழலை வளர்ப்பதற்கு இது போன்ற நிகழ்வுகள் முக்கியம்" என்றும் பங்கேற்பாளர்கள் இதன்போது கூறினார்கள்.
இந்நிகழ்வின் வெற்றியானது, வணிக உலகில் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதன் முக்கியத்துவத்தையும், குறைவான பிரதிநிதித்துவ சமூகங்களை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டியது. GoodPRஇன் முன்முயற்சியானது, உள்ளடக்கிய மற்றும் கூட்டு வளர்ச்சியை ஊக்குவிக்கும் எதிர்கால நிகழ்வுகளுக்கு வழி வகுத்துள்ளது. இது இலங்கையில் மிகவும் சமமான மற்றும் செழிப்பான தொழில் முனைவோர் நிலப்பரப்புக்கு பங்களித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM