இன்று 8 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு இலங்கைக்கு வருகைதரும் அமெரிக்க விளையாட்டுத் தூதுவர்களான தேசிய கூடைப்பந்தாட்ட சங்கம் (NBA) மற்றும் பெண்கள் தேசிய கூடைப்பந்தாட்ட சங்கம் (WNBA) ஆகியவற்றின் முன்னாள் வீரர்களான ஸ்டீபன் ஹொவர்ட் மற்றும் அஸ்டோ என்ஜாய் ஆகியோரை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் பெருமையுடன் வரவேற்கிறது.
Foundation of Goodness மற்றும் IImpact Hoop Lab ஆகியவற்றுடனான ஒத்துழைப்பின் காரணமாக சாத்தியமான பல்வேறு தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் விளையாட்டின் சக்திகளை ஒன்றிணைப்பதற்கான ஒரு வார கால கூடைப்பந்தாட்ட நிகழ்ச்சித்திட்டத்தை அமெரிக்க தூதரகத்தின் பொது இராஜதந்திரப் பிரிவு ஆரம்பிக்கும்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில், ஓய்வுபெற்ற தொழில்முறை கூடைப்பந்தாட்ட வீரர்களான ஹொவர்ட் மற்றும் என்ஜாய் ஆகியோர் “ஹூப்ஸ் போஃர் ஹோப் : கூடைப்பந்தாட்டத்தின் மூலம் எல்லைகளை இணைத்தல்” எனும் ஒரு வாரகால கூடைப்பந்தாட்ட நிகழ்ச்சியை நடத்துவார்கள்.
கூடைப்பந்தாட்ட ஆலோசனை முகாம்கள் மற்றும் கண்காட்சிப் போட்டிகளுக்கு விளையாட்டுத் தூதுவர்கள் தலைமை தாங்குவதுடன் கொழும்பு மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெறும் வடக்கு, ஊவா, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களைச் சேர்ந்த 14-18 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் பங்குபற்றும் தலைமைத்துவ அமர்வுகளிலும் கலந்துகொள்வர்.
இலங்கை கூடைப்பந்தாட்ட சம்மேளனம், தேசிய பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் வீரர்களுடன் தமது நிபுணத்துவத்தை அமெரிக்காவின் விளையாட்டுத் தூதுவர்கள் பகிர்ந்து கொள்வார்கள். கூடைப்பந்தாட்ட ஆலோசனை முகாம்களுக்கு அப்பால் இலங்கை பாடசாலை மாணவர்களுடன் இணைந்து கொழும்புப் பகுதியில் மேற்கொள்ளப்படும் ஒரு சமூக சேவை செயற்றிட்டத்திலும் அவர்கள் பங்கேற்பர்.
“அமெரிக்க மற்றும் இலங்கை மக்களுக்கிடையில் காணப்படும் வலுவான மக்கள் தொடர்புகளை மேலும் கட்டியெழுப்புவதற்கு வருகைதந்திருக்கும் இலங்கைக்கான எமது விளையாட்டுத் தூதுவர்களாக ஸ்டீபன் மற்றும் அஸ்டோவை வரவேற்பதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம்” என அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் தெரிவித்தார்.
“தொடர்பாடல், குழுப்பணி, மீண்டெழும்தன்மை, அனைவரையும் உள்ளடக்குதல் மற்றும் பிணக்குகளைத் தீர்த்தல் போன்ற விடயங்களில் எமது விளையாட்டுத் தூதுவர்கள் பகிர்ந்துகொள்ளும் பாடங்கள் தலைமைத்துவ மேம்பாடு, சமூகத்தை கட்டியெழுப்புதல், சமத்துவம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்கு மிக அவசியமானவை ஆகும். அமைதி மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதில் விளையாட்டு ஒரு சக்திவாய்ந்த கருவியாக அமையும் எனும் எமது நம்பிக்கைக்கு இந்த அமெரிக்க விளையாட்டு தூதுவர்கள் நிகழ்ச்சித்திட்டம் ஒரு சான்றாகும்.
அஸ்டோ என்ஜாய் பற்றி:
ஒரு முன்னாள் தொழில்முறை பெண்கள் கூடைப்பந்தாட்ட வீராங்கனையான அஸ்டோ என்ஜாய் அமெரிக்க யுட்டா மாநில பல்கலைக்கழகத்தின் தற்போதைய உதவிப் பயிற்சியாளர் ஆவார். National Association of Intercollegiate Athletics (NAIA)இன் அனைத்து அமெரிக்க முதல் அணியில் இரண்டு முறை இடம்பிடித்த என்ஜாய்-டியெட்டா, டெட்ராய்ட் ஷொக்கிற்காக ஐந்து தடவைகளில் (பருவங்களில்) விளையாடியுள்ளதுடன், 2003 WNBA வீரமுதன்மை (சம்பியன்ஷிப்) இனையும் வென்றுள்ளார்.
இந்தியானா ஃபீவர், ஹூஸ்டன் கொமட்ஸ் மற்றும் சியாட்டல் ஸ்டோர்ம் ஆகிய அணிகளுக்காகவும் அவர் விளையாடியுள்ளதுடன், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் தொழில் ரீதியாக அவர் விளையாடியுள்ளார். அவர், விளையாட்டு, கல்வி மற்றும் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தின் ஊடாக ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பெண் பிள்ளைகளுக்கு உதவி செய்யும் ஒரு இலாப நோக்கற்ற அமைப்பான Astou Ndiaye Foundation (ASTOUNDIAYEF) இன் ஸ்தாபகருமாவார்.
ஸ்டீபன் ஹொவர்ட் பற்றி:
ஸ்டீபன் ஹோவர்ட் ஒரு நீடித்த அனுபவமுடைய NBA விளையாட்டு வீரரும், தலைமைத்துவ நிபுணரும் ESPN FOX விளையாட்டு அலைவரிசைகளுக்கான கூடைப்பந்தாட்ட ஆய்வாளரும் ஆவார். சியாட்டல் சூப்பர்சோனிக்ஸ், சான் அன்டோனியோ ஸ்பர்ஸ் மற்றும் மைக்கல் ஜோர்டன் மற்றும் புல்ஸ் இற்கெதிராக NBA இறுதிப் போட்டியில் பங்கேற்ற 1996-1997 ஜாஸ் அணி உள்ளிட்ட யுட்டா ஜாஸ் அணி ஆகியவற்றுடன் இணைந்து NBA போட்டிகளில் நான்கு ஆண்டுகள் அவர் விளையாடியுள்ளார். செயற்திறன், உற்பத்தித்திறன் மற்றும் இலாபமீட்டும் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான உத்திகளை தனிநபர்களுடனும் நிறுவனங்களுடனும் பகிர்ந்து கொள்வதற்காக ஹொவர்ட் தற்போது உலகம் முழுவதும் பயணம் செய்கிறார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM