நாட்டின் சீரற்ற காலநிலையில் மீண்டும் மாற்றம்!

Published By: Vishnu

07 Jun, 2024 | 06:20 PM
image

நாளை 08ஆம் திகதி முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை சற்று அதிகரித்துக் காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும்.

மேலும் வடமேற்கு, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 - 50 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அத்தனகலு ஓயா உட்பட சில இடங்களில்...

2024-10-13 13:48:06
news-image

உடல்நல பாதிப்பினால் தேர்தலில் போட்டியிடவில்லை என...

2024-10-13 13:06:03
news-image

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காவிட்டால் ஒரு இலட்சம்...

2024-10-13 13:03:09
news-image

சீரற்ற காலநிலையால் இருவர் பலி; 76,218...

2024-10-13 12:46:23
news-image

கல்கிசையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2024-10-13 12:54:10
news-image

தேசிய கட்சிகளின் தேசியப் பட்டியல் வெளியீடு!

2024-10-13 13:12:23
news-image

பிரதான எதிர்க்கட்சி தலைவர் வேட்பாளரா? பிரதமர்...

2024-10-13 12:12:07
news-image

விசேட தேவையுடைய சிறுவர்களை சித்திரவதை செய்த...

2024-10-13 12:00:53
news-image

பொறுப்புக்கூறலுக்கு உள்நாட்டு பொறிமுறை - உயிர்த்த...

2024-10-13 12:05:06
news-image

பிரிக்ஸ் அமைப்பில் இணைகிறது இலங்கை :...

2024-10-13 11:40:10
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சிவராம்...

2024-10-13 11:24:35
news-image

ஹுங்கமவில் கண்ணாடிக் குவியலுக்கு அடியில் விழுந்து...

2024-10-13 11:19:29