சிலர் வாகனத்தை இயக்குவதற்கான சாரதி பணியை தொழிலாக கொண்டிருப்பர். அதிலும் சிலர் வங்கியின் கடனுதவியுடன் சொந்தமாக வாகனத்தை வாங்கி அதனை இயக்கி அதனூடாக கிடைக்கும் வருவாயை வங்கிக்கு தவணை முறையில் செலுத்தி தங்களது கடனை சீராக்குவதுடன் தங்களது வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்திக் கொள்வர். இவர்களுக்கு பருவமழை, சாலை வசதி, பொருள் போக்குவரத்திற்கான வாய்ப்பு ..என பல விடயங்கள் சாதகமாக இருந்தால்தான் தொழிலில் ஓரளவிற்கு வெற்றி பெறலாம். இந்த தொழிலில் ஈடுபட்டிருக்கும் பலரும் வாகனத்தை வங்கியில் அடமானம் வைத்து அதிலிருந்து கிடைக்கும் தொகையை தொழில் நடத்தி, லாபம் சம்பாதிக்க திட்டமிடுவர். இவர்கள் கடுமையாக உழைத்தாலும் சூழல்காரணமாக தொழிலதிபராக உயர இயலாமல் கடுமையான போராட்டத்தை சந்தித்துக் கொண்டிருப்பர். இவர்கள் ஒப்பற்ற சிறந்த தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்களை எம்முடைய முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
உங்களது ஜாதகத்தில் லக்னம் எதுவாக இருந்தாலும் அந்த லக்னத்திற்கு பத்தாம் இடத்தின் அதிபதி மீன ராசியில் இருந்தால்... உதாரணமாக நீங்கள் ரிஷப லக்னமாக இருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய பத்தாமிடமான மகர வீட்டின் அதிபதியான சனி பகவான் மீன ராசியில் இருந்தால்... நீங்கள் சிறந்த தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்களை எம்முடைய முன்னோர்கள் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உங்களுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் ஆலயத்தில் தனி சன்னதியில் வீற்றிருந்து அருள் பாலிக்கும் இறைவனுக்கும், இறைவிக்கும் வஸ்திர தானம் வழங்குவதும், ஆலயத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்கு வஸ்திரதானம் வழங்குவதும் தொழிலில் சிறப்பான பலனையும், முன்னேற்றத்தையும் அளிக்கும்.
கடற்கரைக்கு சென்று நீங்கள் நீராடினால் உங்களுக்கு தொழிலில் இருந்த தடை விலகும். ஆனால் எந்த காரணத்தை முன்னிட்டும் உங்களுக்கு அறிமுகமான நபர்கள் முன்னிலையில் நீங்கள் பொது இடமான கடற்கரையில் நீராடக்கூடாது. கடற்கரையில் நீராடுவதற்கு மனம் சம்மதிக்கவில்லை அல்லது உடலும், உடல் தோற்றமும் பொருத்தமாக இல்லை என எண்ணுபவர்கள்.. தனிமையில் குளியல் அறையில் நீராடுவது தான் உத்தமம்.
சொந்த வீடாக இருந்தாலும் அல்லது வாடகை வீடாக இருந்தாலும் உங்களுடைய வீட்டின் எல்லைச் சுவர் மீது அல்லது உங்களுடைய வீட்டின் வளாகத்திற்குள் துளசி செடியை வளர்க்க கூடாது. அதற்காக வாஸ்து படி அந்த நிபுணர்களின் ஆலோசனையை பெற்று பிரத்யேக இடத்தை கண்டறிந்து அந்த இடத்தில் மாடத்தைக் கட்டி அதில் துளசி செடியை வளர்க்க வேண்டும். துளசி செடியை பதியமிடுவதுடன் உங்களது காரியம் நிறைவேறி விட்டது என எண்ணாதீர்கள். அதனை கண்ணும் கருத்துமாக பராமரிக்க வேண்டும். அதில் ஏதேனும் தடை ஏற்பட்டால்... உங்களுடைய தொழிலில் எதிர்பாராத விதமாக நஷ்டம் ஏற்படும்.
ஆலயங்களில் சிவனடியார்கள் உழவாரப் பணிகளை மேற்கொண்டால்.. அதில் உங்களையும் மனமுவந்து ஈடுபடுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு தொழில் ரீதியான புதிய வாய்ப்புகளை பெற்றுத் தருவதுடன் தொழில் விருத்தி அடையவும் செய்யும்.
வாரந்தோறும் சனிக்கிழமைகளில் அரச மரத்தையும் அல்லது அரச மரத்துடன் கூடிய விநாயகப் பெருமானை சுற்றி வந்து வணங்கினாலும் தொழிலில் லாபம் உயரும்.
உங்களது வீட்டின் முன் பகுதியில் கழிவு நீரை தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதையும் கடந்து கழிவுநீர் தேங்கத் தொடங்கினால்... உங்களுடைய தொழிலில் முடக்கமும், நஷ்டமும் ஏற்படும். சில தினங்களுக்குள் இதனை சீர் செய்யாவிட்டால் தொழிலில் மட்டுமல்ல குடும்ப உறவுகளிலும் சூட்சமமான சிக்கலை ஏற்படுத்தி மன அழுத்தத்தை உண்டாக்கி தொழிலில் எதிரொலித்து நஷ்டத்தை ஏற்படுத்தும்.
உங்களைக் கவர்ந்த குருமார்களுடன் அல்லது அவர்களுடைய ஜீவசமாதிக்கு சென்று சேவை செய்வதையும், அமாவாசை மற்றும் பௌர்ணமி திகதிகளில் அங்கு நடைபெறும் தானங்களுக்கும் உதவி செய்தால் லாபம் அதிகரிக்கும். மேலும் கோழி மற்றும் கோழி குஞ்சுகளுக்கு பிடித்த இரையை தானமாக வழங்கினாலும் லாபம் உயரும்.
உங்களது லக்னம் எதுவாக இருந்தாலும் லக்னத்திற்கு பத்தாம் வீட்டின் அதிபதி மீன ராசியில் இருந்தால்.. மேலே சொன்ன எளிய பரிகாரங்களை உறுதியாக செய்து சிறந்த தொழிலதிபராக உயருங்கள்.
தொகுப்பு : சுபயோகதாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM