பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை ரத்த ஓட்ட சமச்சீரற்ற பாதிப்பிற்கான நவீன சிகிச்சை!

07 Jun, 2024 | 06:48 PM
image

ன்றைய சூழலில் பிறக்கும் பச்சிளம் குழந்தைகளில் சிலருக்கு மூளை பகுதிக்கு இயல்பான அளவில் நடைபெற வேண்டிய ரத்த ஓட்டத்தில் சமச் சீரற்ற தன்மை ஏற்பட்டால்.. இதனால் மூளை பகுதிக்கு தேவையான ஓக்சிஜன் அளவு குறைந்து செல்கள் சேதமடையும். இதன் காரணமாக அந்தக் குழந்தைக்கு பல்வேறு பாதிப்புகள் உண்டாகும். குறிப்பாக தலை நிற்காமல் ஆடிக் கொண்டிருப்பது அல்லது தலைப்பகுதி இயல்பை விட அசாதாரணமான சூழலில் ஒரு பக்கமாக சாய்ந்திருப்பது போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும்.  இதற்கு தற்போது நவீன சிகிச்சைகள் மூலம் முழுமையான நிவாரணம் பெற முடியும் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

பிறந்த குழந்தை மூன்று மாதமாகியும் தாயின் முகத்தைப் பார்த்து சிரிக்கவில்லை என்றாலும்... நான்கு மாதமாகியும் தலை ஸ்திரமாக நிற்கவில்லை என்றாலோ... ஒரு வயதாகியும் குழந்தை நிற்கவில்லை.. நடக்கவில்லை என்றாலோ அப்போது வைத்தியர்களை சந்தித்து ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். அதன் போது மருத்துவர்கள் ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பர். வைத்தியர்கள் பரிசோதனைக்கு பிறகு குழந்தைக்கு ஹைபோக்சியா இஸ்கிமீக் என்பலோபதி என்ற பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக விவரிப்பர்.  அதாவது மூளைக்கு கிடைக்க வேண்டிய குருதி ஓட்டத்தில் ஓக்சிஜன் இயல்பான அளவை விட குறைவான அளவில் இருந்தால்... அதனால் ஏற்படும் பாதிப்பு இது என விவரிக்கலாம்.

இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட குழந்தைக்கு மூளை வளர்ச்சி என்பது தாமதமாகும்.‌ இதன் காரணமாக பிறந்த குழந்தைக்கு வலிப்பு தாக்கங்கள் ஏற்படக்கூடும். தசை இறுக்கம் ஏற்படும்.‌

குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது ஏதேனும் நோய் தொற்று காரணமாகவோ.. குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது அந்த பெண்மணிக்கு பேறு கால சர்க்கரை நோய் இருந்தாலோ.. நஞ்சுக்கொடி வழியாக குழந்தைக்கு செல்ல வேண்டிய ரத்த ஓட்டத்தில் ஏதேனும் பாதிப்போ அல்லது தடையோ ஏற்பட்டாலும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். வேறு சில பெண்மணிகளுக்கு பிரசவமான தருணத்தில் குழந்தை அழாமல் தாமதிப்பது..‌ பிரசவ வலி இயல்பான அளவைவிட கூடுதலாக நீட்சி அடைந்து கொண்டே இருப்பது..‌ என வேறு சில காரணங்களும் இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பச்சிளம் குழந்தைகள் பிறந்தவுடன் அசாதாரணமான அழுகை, வலிப்பு, தசை இறுக்கம் ... போன்ற அறிகுறிகள் இருந்தாலும் அந்த பச்சிளம் குழந்தை மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என அவதானிக்கலாம்.

இதுபோன்ற பாதிப்புகளுக்கு வைத்தியர்கள் எம் ஆர் ஐ ஸ்கேன், எக்கோ கார்டியோகிராபி, இசிஜி, காது கேட்கும் திறன் பரிசோதனை, கிரானியல் அல்ட்ரா சோனோகிராபி போன்ற பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பர். பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் குழந்தைகளை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் முதன்மையான நிவாரணத்தை வழங்குவர்.‌

- வைத்தியர் ஸ்ரீதேவி

தொகுப்பு : அனுஷா

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோள்பட்டை சவ்வு அழுத்தப் பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-17 15:50:29
news-image

புற்றுநோய் கட்டிகளை லேப்ரோஸ்கோப்பிக் சத்திர சிகிச்சை...

2024-06-15 13:45:29
news-image

தண்டுவடத்தில் ஏற்படும் காசநோய் பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-14 16:56:58
news-image

அசாதாரண கருப்பை ரத்தப்போக்கு பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 13:23:09
news-image

இடைநிலை நுரையீரல் தொற்று பாதிப்பிற்குரிய நவீன...

2024-06-12 09:12:17
news-image

மூளை கட்டியின் வகைகளும், காரணங்களும்...!?

2024-06-10 17:28:32
news-image

நீரிழிவு நோயால் நரம்பு மண்டல பாதிப்பு...

2024-06-08 16:19:56
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் மூளை ரத்த...

2024-06-07 18:48:18
news-image

குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதய குறைபாடு ஏற்படுவதை...

2024-06-04 14:04:02
news-image

உறக்கமின்மை குறைபாட்டை களைவதற்கான எளிய வழிமுறைகள்.?

2024-06-03 15:51:07
news-image

இரத்த சர்க்கரையின் அளவை உயர்த்தும் காரணிகள்...?!

2024-06-01 20:22:03
news-image

அடி வயிற்று தசை பிடிப்பு பாதிப்பிற்கான...

2024-05-31 16:33:40