உலகின்  ஐந்தாவது  மிகப்பெரிய இயற்கைத் துறைமுகமான திருகோணமலை துறைமுகத்தில் துறைமுக நகர் திட்டத்தை முன்னெடுக்க அரசாங்கம்   உத்தேசித்துள்ளது.  திருகோணமலை துறைமுக நகர அபிவிருத்தி தொடர்பாக சிங்கப்பூர் நிறுவனமான சுபர்ணா ஜுரோங் சாத்திய ஆய்வு முன்னெடுத்துள்ள நிலையில் அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர் அடுத்த கட்டத்திற்கு  அரசாங்கம் செல்லும் என துறைமுகங்கள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன்  இலங்கையின்  மூன்று முக்கிய துறைமுகங்களான  கொழும்பு , திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஆகிய துறைமுகங்களை இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி  செய்ய முடியும்  எனவும்  அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் செய்தி நிறுவனம் ஒன்றிக்கு அளித்துள்ள செவ்வியில் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.