(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்கும் வீ.எப்.எஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. அது தொடர்பான சவாலை ஏற்றுக்கொண்டு அமைச்சரவையில் அதற்கு எதிராக செயற்பட்டு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (07) வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்கும் வீ.எப்.எஸ் நிறுவனத்தின் நடவடிக்கை தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்,
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்கும் வீ.எப்.எஸ் நிறுவனத்திடம் பணம் பெற்றுக்கொண்டு தற்போது மெளனமாக இருப்பதாக எனக்கும் சிலர் குற்றச்சாட்டு தெரிவித்தனர். ஆனால், நான் வாய் மூடிக்கொண்டிருக்கவில்லை. அது தொடர்பில் அமைச்சரவையில் நான் குரல் கொடுத்தேன். அந்த நிறுவனத்துக்கு எதிராக தற்போது வழக்கு தொடுத்திருக்கிறேன். எனது கடமையை நான் செய்து வருகிறேன். அது தொடர்பில் அமைச்சரவையில் நான் மேற்கொண்ட நடவடிக்கை அமைச்சரவையில் இருக்கும் அனைவருக்கும் தெரியும். என்றாலும் அமைச்சரவையில் கூட்டுப்பொறுப்பை பாதுகாப்பது எனது கடமை.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு விசா வழங்கும் வீ.எப்.எஸ் நிறுவனத்தின் கட்டணம் தொடர்பில் அமைச்சரவை தீர்மானம் எடுத்திருக்கிறது. அந்த தீர்மானத்தில் மாற்றங்களை மேற்கொள்ள எங்களுக்கு முடிகிறது. குறிப்பாக தனி நபர் விசா கட்டணத்தை ஏற்கனவே இருந்த கட்டணத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம். அதேபோன்று 7 நாடுகளுக்கு விசா இல்லாமல் நாட்டுக்குள் வருவதற்கு அனுமதி வழங்கி இருக்கிறோம். தற்போது 11 பேர் கொண்ட குழுவினால் ஒரு அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. அதில் 60 நாடுகளுக்கு இலவச விசா வழங்க நடவடிக்கை எடுத்திருக்கிறோம்.
அதனால் சவால்களை ஏற்றுக்கொள்ள முடியுமான அமைச்சர் என்ற வகையில், இது தொடர்பாக கலந்துரையாடி விசா வழங்கும் நடைமுறையில் மாற்றங்களை ஏற்படுத்துவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM