யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் கட்டுப்படுத்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல் !

07 Jun, 2024 | 02:11 PM
image

யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்று வியாழக்கிழமை (06) அன்று  மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. 

இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தை கவனத்தில் கொண்டு இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், புள்ளிவிபரங்களின் அடிப்படையில் 2024 ஜனவரி முதல் இன்றுவரை 4,729 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மரணமும் பதிவாகியுள்ளதாகவும், முன்னைய வருடங்களுடன் ஒப்பிடும் போது இவ் அரையாண்டில் டெங்குநோயாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார். மக்களிடத்து விழிப்புணர்வினை ஏற்படுத்துவதோடு மட்டுமில்லாது.  

வலயக்கல்வி பணிப்பாளர்கள் , பாடசாலை அதிபர்களுடனும் கலந்துரையாடி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை வளப்படுத்த    வேண்டுமெனவும் , அனைத்து துறைசார் அதிகாரிகளும் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் எதிர்காலத்தில் டெங்குநோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்றும் குறிப்பிடார். மேலும் எதிர்வரும் யூலை மாதம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள கிராம மட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழுக்களை ஸ்திரப்படுத்தி அதன் மூலம் கிராமிய மட்டத்தில் விழிப்புணர்வு சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறுபிரதேச செயலாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். அந்த ஒருமாத காலப்பகுதியில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம சேவையாளர்கள் பிரிவிலும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் கூட்டங்கள் நிகழ்த்துவதின் மூலமாக மக்களிடத்தே விழிப்புணர்வுகளை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவித்திருந்தார். 

கிணறுகளில் காணப்படுகின்ற குடம்பிகளை கட்டுப்படுத்த குடம்பிகளை உண்ணும் மீன்களை கிணற்றினுள் விடுதல், வீட்டுகழிவுகள் வீதிகளில் கொட்டப்படுவதைகட்டுப்படுத்தல், கழிவுகளை தரம் பிரித்து கழிவு தொட்டிகளில் போடுவதை ஊக்குவித்தல் மற்றும் பாடசாலைமாணவர்கள் மட்டத்தில் விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளல், பிளாஸ்டிக் கழிவுகளை (போத்தல்) பொது இடங்களில் சேகரிக்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தல் போன்றவிடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இக் கலந்துரையாடலில் வடக்குமாகாண சுகாதாரஅமைச்சின் செயலாளர் . அருள்ராஜ், மாகாண சுகாதாரசேவை பணிப்பாளர்  பத்திரண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) க.ஸ்ரீமோகனன், யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலாளர்கள், சுகாதாரவைத்திய அதிகாரிகள், சிரேஸ்ட பொது சுகாதார பரிசோதகர்கள் , பிரதேச சபை செயலாளர்கள், தொற்றுநோயியல் பிரிவு வைத்திய அதிகாரி, சமூகமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு கொழும்பில் மாணவர்களுக்கு...

2026-07-16 18:54:53
news-image

கொழும்பில் பொழுதுபோக்கு வரி குறைப்பு :...

2026-07-16 17:42:04
news-image

சுற்றுலா விசா மூலம் லித்துவேனியாவில் வேலை...

2026-07-16 17:07:35
news-image

கொழும்பில் ஆசிரியையும் அவரது கணவரும் 2...

2026-07-16 16:52:03
news-image

பாட அடிப்படையில் 30,000 புதிய ஆசிரியர்களை...

2026-07-16 16:48:26
news-image

"நேர்மைமிக்க கலாசாரம் - கிளீன் ஸ்ரீலங்கா"...

2026-07-16 16:36:18
news-image

சம்மாந்துறையில் ஆபத்தான முறையில் மோட்டார் சைக்கிள்...

2026-07-16 16:18:53
news-image

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு...

2026-07-16 15:50:29
news-image

ஜனாதிபதி தலைமையில் துறைமுகங்கள் மற்றும் சிவில்...

2026-07-16 15:33:42
news-image

83 சதவீத சிறைச்சாலை உயர் பதவிகள்...

2026-07-16 15:22:32
news-image

நோர்வூட் தேயிலை தோட்டத்தில் மாணிக்கக் கல்...

2026-07-16 14:50:48
news-image

எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணைகள் வெறும் ஊடக...

2026-07-16 14:41:36