கனடா செந்தில்குமரன் நிவாரண நிறுவனத்தின் அனுசரணையில் 64 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்கள் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை நிர்வாகத்திடம் இன்று வெள்ளிக்கிழமை (07) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் எஸ்.குமரவேல் மற்றும் புதிய வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் த.காண்டீபன் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக இலங்கைக்கான கனடா நாட்டின் உயர்ஸ்தானிகர் எரிக் வாஸ் கலந்து கொண்டு வைத்திய உதவிப் பொருட்களை கையளித்திருந்தார்.
மேலும், நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் பத்திரன, யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன் ,செந்தில்குமரன் நிவாரண நிறுவன ஸ்தாபகர்.டி.செந்தில்குமரன், யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடம் மற்றும் போதனா மருத்துவமனையின் ஆலோசகர் வைத்தியர் ஆ.தங்கராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேற்படி, இரத்த சுத்திகரிப்பு இயந்திரங்களின் உதவியுடன் நாளாந்தம் 4 நோயாளர்களுக்கு இரத்த சுத்திகரிப்பு சேவையை வழங்க முடியும் என வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM