நாவலப்பிட்டி பெனிதுடுமுல்லை உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு கதிர்காம தேவாலயத்தின் வருடாந்த மகா தேவ பெரஹரா இம்முறையும் ஜுன் 08 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 8.00 மணிக்கு நாவலப்பிட்டி நகரை வலம்வரவுள்ளது.
தெடிமுண்ட, கதிர்காமம் மற்றும் ஸ்ரீ மஹா விஷ்ணு ஆகிய தெய்வங்களைத் தாங்கியயானைகளின் ஊர்வலத்துடன் இலங்கையில் பிரசித்தி பெற்ற முன்னணி கலைஞர்கள் பங்குகொள்ளும், மேலைத்தேய" கீழைத்தேய மற்றும் சப்பிரகமுவ நடனங்கள், மத்தளம்,முகமூடி நடனம், தீப்பந்தம், பொய்க்கால் நடனம், பிரம்பு, மயில், காவடி நடனம, றபான, ஆகிய நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன.
மேலும் இந்நாளில் கோயில் வளாகத்தில் காலை 11.00 மணிக்கும் இரவு 11.00 மணிக்கும , பகல் மற்றும் இரவு தேவ மகா பூஜைகள் நடைபெறும். பக்தர்கள் தனிப்பட்ட முறையில் பிரார்த்தனை செய்து, தங்கள் நேர்த்திகளை நிறைவேற்றிக் கொள்ளவும், சாந்தி பூஜைகள் செய்யவும் வாய்ப்பு உள்ளது.
இந்த ஆலயம் 1973 ஆம் ஆண்டு நாவலப்பிட்டி, பெனிதுடுமுல்லையில் வசித்து வந்த அமரர் வைத்தியர் எஸ்.எச்.பி. மாரவெல்ல (புத்ததாச வைத்தியர்) என்பவரால் நிர்மாணிக்கப்பட்டு வருடாந்தம் தேவ பெரஹரா ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஒவ்வொரு
வருடமும் நாவலப்பிட்டி நகர வீதிகளில் பயணிக்கும் மிகப் பெரிய தேவ பெரஹராவும் இதுவாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM