மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைச்சோலை பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (06) இரவு பெருந்தொகை பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்துக்கு பின்புறமாக உள்ள வீட்டிலேயே இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தற்போது புன்னைச்சோலை பத்திரகாளியம்மன் ஆலயத்தில் நடைபெற்றுவரும் திருச்சடங்கில் கலந்துகொள்வதற்காக அவ்வீட்டில் வசிப்பவர்கள் வீட்டினை பூட்டி, சாவியை வீட்டினருகே ஓரிடத்தில் மறைத்து வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
பின்னர், வீடு திரும்பியவர்கள், வீட்டின் படுக்கையறையில் இருந்த அலுமாரி உடைக்கப்பட்டு, அதிலிருந்த 17 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பணமும் நான்கரை பவுண் தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டதை பார்த்துள்ளனர். அத்தோடு, அங்கு பொருத்தப்பட்டிருந்த சீசீரிவி கமராவின் கார்ட் டிஸ்க்கும் களவாடப்பட்டிருந்தது.
வீட்டின் மதில் மீதேறி, பாய்ந்து, மறைத்துவைத்திருந்த சாவியை எடுத்து, வீட்டினுள் புகுந்து, கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
பக்தர்கள் ஆலயத்துக்கு சென்றுவரும் நேரங்களை அவதானிக்கப்பட்டே கொள்ளைக் குற்றச் செயல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸார் மோப்பநாயின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்ட குற்றத்தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி ரவிச்சந்திரன் தலைமையிலான பொலிஸ் குழுவினரால் தீவிர விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM