(நெவில் அன்தனி)
பார்படோஸ், பிறிஜ்டவுனில் நடைபெற்ற (இலங்கை நேரப்படி இன்று காலை) பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண போட்டியில் நமிபியாவை 5 விக்கெட்களால் ஸ்கொட்லாந்து வெற்றிகொண்டது.
சுமாரான மொத்த எண்ணிக்கை பெறப்பட்ட இப் போட்டியில் நமிபியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 156 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 18.3 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 157 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
இந்த வெற்றியுடன் பி குழுவுக்கான அணிகள் நிலையில் ஸ்கொட்லாந்து 3 புள்ளிகளுடன் முதலாம் இடத்தை அடைந்துள்ளது அவுஸ்திரேலியா ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகளைப் பெற்று 2ஆம் இடத்தில் இருக்கிறது.
இது இவ்வாறிருக்க நமிபியாவுக்கு எதிராக முதல் தடவையாக வெற்றிபெற்ற ஸ்கொட்லாந்து தரவரிசையில் நமிபியாவை முந்தியுள்ளது.
இப் போட்டியின் இறுதியில் ஸ்கொட்லாந்து இலகுவாக வெற்றிபெற்ற போதிலும் முதல் 11 ஓவர்களில் தடுமாற்றத்தை எதிர்கொண்டு 4 விக்கெட்களை இழந்து 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
அணித் தலைவர் ரிச்சி பெறிங்டன் (47 ஆ.இ.), மைக்கல் லீஸ்க் (17 பந்துகளில் 4 சிக்ஸ்களுடன் 35) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை இலகுவாக்கினர்.
அவர்களைவிட மைக்கல் ஜோன்ஸ் 26 ஓட்டங்களையும் ப்றெண்டன் மெக்முலன் 19 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் அணித் தலைவர் ஜேர்ஹாட் இரேஸ்மஸ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய நமிபியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.
ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 31 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்றதுடன் ஸேன் க்றீனுடன் 5ஆவது விக்கெட்டில் 51 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.
ஸேன் க்றீன் 28 ஓட்டங்களையும் நிக்கலஸ் டெவின் 20 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கினர்.
வேறு எவரும் 15 ஓட்டங்களுக்கு மேல் பெறவில்லை.
பந்துவீச்சில் ப்றட் வீல் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்றட் கியூரி 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகன்: மைக்கல் லீஸ்க்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM