எம்மில் சிலர் அரசாங்க பணி வாய்ப்பிற்காக காத்திருக்காமல் அரசாங்க அனுசரணையுடன் வங்கிகளிலிருந்து கடன் பெற்று தான் கற்ற கல்வியின் பலனாக சிறிய அளவில் தொழிற்சாலையை உருவாக்கிக் கொண்டு, தொழில்துறையின் முன்னேற்றத்திற்கும், அதனுடாக நாட்டின் முன்னேற்றத்திற்கும் அயராது பாடுபட்டுக் கொண்டிருப்பர். இவர்கள் வெளிநாட்டிலிருந்தோ அல்லது பெரிய கொர்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்தோ புதிய ஒப்பந்தங்களை பெற்று தொழிற்சாலையை விரிவுபடுத்தி மேலும் பல தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கி சிறந்த தொழிலதிபராக உயர வேண்டும் என கனவு காண்பர்.
சூழல்காரணமாகவும் அரசியல் ஸ்திரத்தன்மையில் அவ்வப்போது உருவாகும் சம சீரற்ற தன்மையின் காரணமாகவும் தொழில்துறையின் தேவையில் ஏற்படும் திடீர் மாற்றம் காரணமாகவும் இவர்களுடைய கனவு கனவாகவே இருக்கும். இவர்கள் சிறந்த தொழிலதிபராக உயர்வதற்கு பல வழிகளில் திட்டமிடுவர். ஆனால் அவை ஏதோ விவரிக்க இயலாத காரணங்களால் தடைப்பட்டு கொண்டே இருக்கும். ஒரு புள்ளியில் இருப்பதை வைத்து மன நிறைவுடன் வாழ்வோம் என்ற மனநிலைக்கு வருகை தந்து விடுவர். இவர்களைப் போன்றவர்களுக்கு சிறந்த தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்களை எம்முடைய ஆன்மீக முன்னோர்களும், ஜோதிட நிபுணர்களும் வழங்கி இருக்கிறார்கள்.
உங்களது ஜாதகத்தில் லக்னம் எதுவாக இருந்தாலும் அந்த லக்னத்திற்கு பத்தாம் இடத்தின் அதிபதி கும்ப ராசியில் இருந்தால் உதாரணமாக நீங்கள் ரிஷப லக்னமாக இருக்கிறீர்கள் என்றால், உங்களுடைய பத்தாமிடமான மகர வீட்டின் அதிபதியான சனி பகவான் உங்களுடைய ராசி கட்டத்தில் கும்ப ராசியில் இருந்தால் நீங்கள் சிறந்த தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்களை எம்முடைய முன்னோர்கள் பட்டியலிட்டிருக்கிறார்கள்.
கையிலும், கழுத்திலும் தங்க ஆபரணங்களை அணிந்தால் முக வசியம் ஏற்பட்டு, தொழிலில் லாபமும், முன்னேற்றமும் கிடைக்கும். உடனே எம்மில் சிலர் அணிந்திருந்த தங்க நகைகள் வங்கிகளில் கடனுக்காக இருக்கிறது. என்ன செய்வது? எனக் கேட்பர். வேறு சிலர் தங்க நகைகளை அணியும் அளவிற்கு பொருளாதார உயர்வு இல்லை என வருத்தப்படுவர். இவர்கள் குங்கும பூவை வாங்கி அரைத்து, அதனை நெற்றியில் திலகமாக வைத்துக் கொண்டாலும் தொழிலில் லாபமும், முன்னேற்றமும் சாத்தியமாகும். வேறு சிலர் சந்தனத்தையும், குங்கும பூவையும் கலந்து அரைத்து திலகமாக்கி நெற்றியில் வைத்துக் கொண்டாலும், புதிய ஒப்பந்தங்கள் மூலம் லாபங்கள் அதிகரிப்பதை அனுபவத்தில் காணலாம்.
மாதம் ஒரு முறை நீங்கள் பிறந்த கிழமைகளில் அதாவது நீங்கள் செவ்வாய்க்கிழமையில் பிறந்திருந்தால் அந்த மாதத்தில் இடம்பெறும் நான்கு அல்லது ஐந்து செவ்வாய்க்கிழமைகளில் ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமையில் காலையில் நீராடும் போது அந்த நீராடும் நீரில் சிறிதளவு பசும்பாலை கலந்து விடுங்கள். அதன் பிறகு அந்த நீரில் நீராடினால் தொழிலில் உள்ள மாயத்தடைகள் அனைத்தும் விலகி லாபம் ஏற்படும். இதனை மாதா மாதம் செய்யலாம் அல்லது குறைந்த பட்சம் மூன்று மாதத்திற்கு ஒரு முறை நீங்கள் பிறந்த கிழமையில் செய்தால் பலன் உண்டு. அதே தருணத்தில் நீங்கள் பசும்பாலில் நீராட விரும்பவில்லை என்றால் காலையில் எழுந்ததும் நீங்கள் அருந்தும் தண்ணீரில் சிறிதளவு பசும்பாலை கலந்து அதனை அருந்தினாலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
மது அருந்துவதையும், மாமிசம் சாப்பிடுவதையும் முற்றாக கைவிட வேண்டும். அன்பின் காரணமாகவோ நட்பின் காரணமாகவோ அல்லது தொழில் முறையிலான நாகரீகம் காரணமாகவோ சிறிதளவு நீங்கள் மது அருந்தினாலும், மாமிசம் சாப்பிட்டாலும் அதற்கு ஏற்ற வகையில் உங்கள் தொழிலில் மறைமுகமான பிரச்சனை ஏற்படும். இதனால் உங்களுக்கு நஷ்டம் உண்டாகும். இதன் காரணமாக எந்த சூழ்நிலையிலும் மதுவையும், மாமிசத்தையும் தொடாதீர்கள்.
சனிக்கிழமைகளில் விரத முறையை கடைப்பிடித்தாலும் தொழிலில் முன்னேற்றத்தை காணலாம். விரதம் என்றால் உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற வகையில் அதனை நீங்களே தீர்மானித்து அதனை உறுதியாக பின்பற்றுங்கள்.
அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் சென்று அந்த ஆலயத்தில் விளக்கு ஏற்றுவதற்காக நல்லெண்ணையை தானமாக, தாராளமாக வாங்கித் தரலாம். இதன் மூலம் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கப்பெற்று, அவர்கள் மூலமாக புதிய ஒப்பந்தங்கள் கிடைத்து தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
உங்களது லக்னம் இதுவாக இருந்தாலும் லக்னத்திற்கு பத்தாம் வீட்டின் அதிபதி கும்ப ராசியில் இருந்தால் மேலே சொன்ன எளிய பரிகாரங்களை உறுதியான மனநிலையுடன் தொடர்ச்சியாக செய்து வந்தால் சிறந்த தொழிலதிபராக உயரலாம்.
தொகுப்பு சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM