மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் அகம் பூஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த வேள்வியும் கலைவிழாவும் நூல் வெளியீடும் நேற்று (06) நடைபெற்றது.
நேற்று காலை அருள்மிகு பாட்டாளிபுரம் விநாயகர் ஆலயத்திலிருந்து பாரம்பரிய முறைப்படி மடைப்பெட்டி எடுத்துச் செல்லப்பட்டது.
அதன் பின்னர், அகம் பூஞ்சோலை ஸ்ரீபத்திரகாளி அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள், அலங்காரங்கள், பூஜைகள் நடத்தப்பட்டது.
அத்தோடு, கலை இலக்கிய விழாவில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். அன்று மாலை நடைபெற்ற நிகழ்வில் ஊடக, கலை, இலக்கிய, ஆன்மிக செயற்பாட்டாளர்கள் கெளரவிக்கப்பட்டனர்.
ஆலயத்தின் பிரதான செயற்பாட்டாளர் பொ. சற்சிவானந்தம் தலைமையில் 'ஆலயத்தின் பூஞ்சோலையாள்' வரலாற்று நூல் வெளியிடப்பட்டது. பின்னர், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இன்று (07) அதிகாலை தீமிதிப்பு, பொங்கல் மற்றும் விசேட பூஜைகளோடு ஆலய நிகழ்வுகள் நிறைவடைந்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM