சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் புதன்கிழமை (5) யோகா தின நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கொன்சல் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி பிரதம அதிதியாகவும், ஊர்காவற்றுறை பிரதேச செயலாளர் மஞ்சுளாதேவி, மாவட்ட சலாசார உத்தியோகத்தர் கிருஷ்ணகுமார், பிரதேச சபை அலுவலக அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
நிகழ்வின் தொடக்கத்தின்போது கொன்சல் ஜெனரல் ஸ்ரீ சாய் முரளி ஊர்காவற்றுறையில் முதன்முறையாக யோகா நிகழ்வை ஏற்பாடு செய்ததன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
யோகாவுக்கு அப்பால் கலாசார ஆதரவை விரிவுபடுத்துவதில் தூதரகத்தின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வுக்கான ஏற்பாடுகளை இலகுபடுத்திய பிரதேச செயலாளருக்கு கொன்சல் ஜெனரல் நன்றி தெரிவித்தார்.
பிரதேச செயலாளர் மஞ்சுளா தேவி தனது உரையில், யோகாவின் பல நன்மைகளை கோடிட்டுக் காட்டியதுடன் யோகாவை சர்வதேசமயமாக்குவதற்கும் ஜூன் 21ஆம் திகதியை உலக யோகா தினமாக நிறுவுவதற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி எடுத்த முயற்சிகளுக்கு நன்றி தெரிவித்தார்.
மாவட்ட கலாசார அலுவலர் கிருஷ்ணகுமார் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு யோகா பயிற்சி செய்வதால் ஏற்படும் ஆன்மிக, மன நலன்கள் தொடர்பாக பேசியதோடு, அவரது யோகா செயல் விளக்கமும் இடம்பெற்றது. இதில் 15 வயதுக்குட்பட்ட மூன்று பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 60 மாணவர்கள் பங்கேற்றனர்.
யோகாவில் தங்களின் அர்ப்பணிப்பு, ஆர்வத்தை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு ஆசனங்களை மாணவர்கள் இதன்போது சிறப்பாக செய்து காட்டினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM