மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் : நீதிமன்றத்தின் வியாக்கியானத்துக்கும், துறைசார்மேற்பார்வை குழுவின் அறிக்கைக்குமிடையில் பரஸ்பர வேறுபாடு - தயாசிறி ஜயசேகர குற்றச்சாட்டு

Published By: L. Abhilashani

06 Jun, 2024 | 05:15 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியானத்துக்கும்,துறைசார் மேற்பார்வை குழு முன்வைத்துள்ள அறிக்கைக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.

நீதிமன்றம் குறிப்பிடாத விடயங்களையும் துறைசார் மேற்பார்வைக் குழு குறிப்பிட்டுள்ளது.ஆகவே இச்சட்டமூலம் விரிவாக ஆராய வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.இருப்பினும் விவாதம் செய்வதற்கு போதுமான காலவகாசம் வழங்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில்  கடந்த இரண்டு ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிடுகிறார். பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கலாம், ஆனால் துறைசார் நிபுணர்களுடன் விரிவாக பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை என்பது பிரதான குற்றச்சாட்டாக காணப்படுகிறது.

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தில் நிறுவனங்களை சுயாதீனப்படுத்தல், கண்காணித்தல்,சேவை விநியோகம் செய்தல் உள்ளிட்ட விடயங்களுக்கான  ஏற்பாடுகள்  உள்ளடக்கப்பட்டுள்ளதாக  குறிப்பிடப்படுகிறது. இந்த  சட்டமூலம் இயற்றப்பட்டதன் பின்னர்  ஸ்தாபிக்கப்படும் 12 நிறுவனங்களுக்கு தலைவர்கள் மற்றும் பணிப்பாளர்கள் ஆகியோரை நியமிப்பதற்கான அதிகாரம் விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மின்சாரத்துறை அமைச்சருக்கு வரையறையற்ற அதிகாரங்கள் வழங்கும் போது ஏற்படும் விளைவுகளுக்கு கடந்த கால சம்பவங்கள் சிறந்த எடுத்துக்காட்டாக காணப்படுகின்றன. மின்சாரத்துறை அமைச்சர் காஞ்சன விஜேசேகரவை நாங்கள் குறை கூறவில்லை.

எதிர்காலத்தில் பதவிக்கு வருபவர்கள் முறையாக செயற்படுவார்களா,இந்த அதிகாரம்  தவறாக பயன்படுத்தப்படலாம். மின்சார சபையில் 6000 பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்ற நிலையில்  நாட்டின் தற்போதைய நிதி நிலைமையை கருத்திற் கொண்டு புதிய நியமனங்களை வழங்காமல் இருக்கும் ஆளணி வளத்தை கொண்டு சேவையை முன்னெடுப்பதற்கு மின்சாரத்துறை அமைச்சர் தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது.

மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் வலுசக்தி தொடர்பான பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவில்  விரிவாக ஆராய வேண்டும் என குழுவின் தலைவரிடம் பலமுறை வலியுறுத்தினேன். ஆனால் அது குறித்து அவர் கவனம் செலுத்தவில்லை. அதற்கான காரணத்தை அறியவில்லை.நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்தவுடன் நேற்று (நேற்றுமுன்தினம்)  துறைசார் மேற்பார்வை குழுவில் நான்கு மணித்தியாலங்கள் மாத்திரமே பேசப்பட்டு தற்போது அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டமூலம் தொடர்பில் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள வியாக்கியானத்துக்கும்,துறைசார் மேற்பார்வை குழு முன்வைத்துள்ள அறிக்கைக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன.நீதிமன்றம் குறிப்பிடாத விடயங்களையும் துறைசார் மேற்பார்வைக்குழு குறிப்பிட்டுள்ளது. ஆகவே இச்சட்டமூலம் விரிவாக ஆராய வேண்டும் என்பதை வலியுறுத்தினோம்.இருப்பினும் விவாதம் செய்வதற்கு போதுமான காலவகாசம் வழங்கப்படவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுன இனவாத கட்சியல்ல என்பதற்கு...

2026-09-15 14:33:38
news-image

பிள்ளையான், கருணாவை நல்வழிப்படுத்தியதைப் போன்று அர்ச்சுனாவையும்...

2026-09-15 17:26:28
news-image

புகையிரத திணைக்கள பொதுமுகாமையாளரை பதவி நீக்க...

2026-09-15 15:36:33
news-image

அர்ச்சுனாவின் சர்ச்சைக்குரிய பேச்சு தொடர்பில் பொலிஸ்,...

2026-09-15 17:27:58
news-image

ஊழல்வாதிகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படாது...

2026-09-15 16:16:14
news-image

அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக அதிகாரத்தை மையப்படுத்தும்...

2026-09-15 16:31:05
news-image

அநுராதபுரம் கட்சி கூட்டத்தில் விடுதலைப் புலிகள்...

2026-09-15 17:47:07
news-image

பேராதனை பல்கலைக்கழக கட்டிடப் பிரச்சினைகளுக்கு 2027க்குள்...

2026-09-15 15:36:04
news-image

நாமல் ராஜபக்‌ஷவை திருடன் என விமர்சிப்பவர்கள்...

2026-09-15 13:51:52
news-image

சுரேஷ் சலேவிடம் வைத்தியசாலையில் முழுமையான விசாரணை...

2026-09-15 17:28:41
news-image

அரசியலமைப்பின் 22ஆவது திருத்தம் : பொதுவெளியில்...

2026-09-15 19:08:21
news-image

இலங்கை பொருளாதாரம் 2026 இரண்டாம் காலாண்டில்...

2026-09-15 19:07:51