சிங்கப்பூர் 'கலாமஞ்சரி' நடத்திய 'அமுதே தமிழே' இசை, ஒளிவட்டு வெளியீடு 

06 Jun, 2024 | 04:01 PM
image

சிங்கப்பூரில் இயங்கும் 'கலாமஞ்சரி' அமைப்பின் நிறுவனர் சௌந்தர நாயகி வயிரவனின் ஆறாவது இசை மற்றும் ஒளிவட்டு சிங்கப்பூர் விக்டோரியா ஸ்டேட்டிலுள்ள தேசிய நூலக வாரியத்தில் கடந்த 2ஆம் திகதி வெளியிடப்பட்டது. 

பாரதிதாசனின் சில பாடல்களை உள்ளடக்கிய ‘அமுதே தமிழே’ எனும் இசை மற்றும் ஒளிவட்டினை சிங்கப்பூர் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் விஸ்வ சதாசிவன் வெளியிட்டார்.

இந்த இசை மற்றும் ஒளிவட்டுக்கு முனைவர் கே. சிவராஜ் இசை வடிவம் கொடுத்திருக்கிறார். இதிலுள்ள ஆறு பாடல்களுக்கு தமிழ் விளக்கங்களை முனைவர் மு. இளங்கோவன் வழங்கினார். இதனை ஆங்கிலத்தில் ஐ.ஏ.எஸ். இதுகீரி எம். ராஜாராம் மொழிபெயர்த்திருக்கிறார். 

இந்த ஆறு பாடல்களையும் நட்சத்திரம் பிரேம் குமார் வீடியோ (ஒளி) அமைப்பு செய்துள்ளார். 

முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் தினகரன், தமிழ்ச் சான்றோர் முனைவர் சுப திண்ணப்பன், முன்னாள் சிங்கப்பூர் தூதர் கேசவபானி மற்றும் பல சமூக அமைப்புகளின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

பாரதிதாசனை மையப்படுத்தி 'அமுதே தமிழே' இசைவட்டு தொடர்பான பேச்சு, கட்டுரை மற்றும் பாட்டுப் போட்டிகள் கலா மஞ்சரியால் நடத்தப்பட்டது. இதில் 120 பேர் பங்குபற்றினர்.

தமிழ்மொழி வளர்ச்சிக் குழுவின் ஆதரவில் நடைபெற்ற இந்த போட்டியில் போட்டியாளர் ஒருவருக்கு 10 வெள்ளி என்று நிர்ணயம் செய்யப்பட்டு, அதில் கிடைக்கப்பெற்ற 1200 வெள்ளி மற்றும் ஒளிவட்டின் மூலம் திரட்டப்பட்ட 600 வெள்ளி என 7000 வெள்ளியை சிண்டாவுக்கு நன்கொடையாக கலா மஞ்சரி வழங்கியது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31
news-image

அவிசாவளை சீரடி சாயி பாபா ஆலய...

2025-03-20 17:21:15
news-image

யாழ். கொழும்புத்துறை, வளன்புரம் புனித சூசையப்பர்...

2025-03-19 13:23:04
news-image

மலையக வாழ் மக்களுக்கு இலவச இருதய...

2025-03-19 13:19:32