திருக்கோணேஸ்வரம் ஆலய விவகாரம் : நீதிமன்ற வழக்கினை முகநூலில் விமர்சித்தவர் பிணையில் விடுவிப்பு  

06 Jun, 2024 | 02:51 PM
image

(துரைநாயகம் சஞ்சீவன்)

நீதிமன்ற வழக்கு தொடர்பாக முகநூலில் விமர்சனம் செய்த நபர் ஒருவர் ஒரு இலட்சம் ரூபாய் காசுப் பிணையிலும், தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

திருக்கோணேஸ்வரம் ஆலய நிர்வாக சபை வழக்கு தொடர்பாக முகநூலில் விமர்சனம் செய்தவருக்கு எதிரான வழக்கு இன்று (06) திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அவ்வேளை, அந்த நபரை ஒரு இலட்சம் ரூபாய் காசுப் பிணையிலும், தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரு சரீர பிணையிலும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு 8ஆம் இலக்க நீதிமன்ற நியாயசபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டத்தின் கீழ் சுந்தரலிங்கம் சிவசங்கரன் என்பவருக்கு எதிராக 22.05.2024 அன்று திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அந்த வழக்கினை பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை ஆதரித்து சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் சமர்ப்பணம் செய்திருந்தார். சிரேஷ்ட சட்டத்தரணியுடன் கனிஷ்ட சட்டத்தரணி சி.சண்முகியும் மனுதாரர் சார்பாக இவ்வழக்கில் ஆஜராகியிருந்தார். 

கோணேஸ்வரர் ஆலயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்த வழக்கை தாக்கல் செய்தவர்களையும், வழக்கில் ஆஜராகியுள்ள சட்டத்தரணிகளையும் எதிராளி விமர்சித்திருக்கின்றார் எனவும் இது 2024ஆம் ஆண்டு 8ஆம் இலக்க நீதிமன்ற நியாய சபை அல்லது நிறுவனமொன்றை அவமதித்தல் சட்டத்தின் கீழ் குற்றச் செயலாகும். எனவே  எதிராளிக்கு நீதிமன்றானது அழைப்பாணையை அனுப்புவதற்கான கட்டளையை ஆக்கும்படியாகவும் வழக்காளி சார்பாக ஆஜரான சட்டத்தரணிகளால் மன்றில் கோரப்பட்டிருந்தது. 

அதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் எதிராளிக்கு இன்று (06) அழைப்பாணை விடுத்திருந்தது. அந்த அழைப்பாணையை ஏற்று நீதிமன்றில் முன்னிலையானபோதே அந்த நபருக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இவ்வழக்கானது ஜூலை 09ஆம் திகதி விசாரணைக்காக மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24
news-image

சிறுவயது திருமணம் அனைத்து இனத்தவர்களிலும் பொதுப்...

2025-03-17 22:18:12
news-image

தென்கொரியாவில் வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி...

2025-03-17 22:20:00
news-image

நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்துச்...

2025-03-17 22:35:48
news-image

வடக்கு, கிழக்கிலுள்ள வரலாற்று தொன்மையான ஆலயங்களை...

2025-03-17 22:14:30
news-image

பரீட்சைகள் திணைக்களம் ஊடாக அரபுக்கல்லூரிகளில் நடத்தப்படும்...

2025-03-17 22:05:15
news-image

கொழும்பு மாநகரசபை மேயர் வேட்பாளர் எரான்...

2025-03-17 21:57:02
news-image

முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் ;...

2025-03-17 21:59:17
news-image

யாழ்.தையிட்டி விகாரையை அண்மித்த பகுதியில் சட்டவிரோதமாக...

2025-03-17 15:22:29
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் கூரிய ஆயுதத்தால்...

2025-03-17 21:38:50