மத்திய காசாவில் ஐநா பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்- 27 பாலஸ்தீனியர்கள் பலி

Published By: Rajeeban

06 Jun, 2024 | 10:28 AM
image

நூற்றுக்கும் மேற்பட்ட இடம்பெயர்ந்தவர்கள் தஞ்சமடைந்திருந்த ஐநா பாடசாலை மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 27 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

மத்திய காசாவில் உள்ள ஐநாவின் பாடசாலை மீதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

ஹமாசின் முகாம் அமைந்திருந்த பகுதியையே தாக்கியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்களையும் உயிரிழந்தவர்களையும் ஏற்றிக்கொண்டு அம்புலன்ஸ்கள் மருத்துவமனைகளிற்கு விரைந்துகொண்டிருப்பதை காணமுடிவதாக பிபிசி  தெரிவித்துள்ளது.

நுசெய்ரட் அகதிமுகாமில் உள்ள பாடசாலையின் மேல்தளத்தில் காணப்பட்ட இரண்டு வகுப்பறைகள் மீது இஸ்ரேலிய விமானங்கள் ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டன என நேரில் பார்த்த ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அழிக்கப்பட்ட வகுப்பறைகளையும் பிரதே அறையில் பிரேதங்களையும் காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.

போதும் நாங்கள் பல தடவை இடம்பெயர்ந்துள்ளோம் உறக்கத்திலிருந்த நான்கு பிள்ளைகளை அவர்கள் கொன்றுவிட்டனர் என காயமடைந்த பெண்ணொருவர் கதறுவதை வீடியோ காண்பித்துள்ளது.

அந்த பகுதியில் ஹமாசின் முகாம் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுவதை ஹமாஸ் மறுத்துள்ளது.

ஆக்கிரமிப்பு படையினர் இடம்பெயர்ந்த மக்களிற்கு எதிராக தாங்கள் மேற்கொள்ளும் ஈவிரக்கமற்ற போரை நியாயப்படுத்த கட்டுக்கதைகளை வெளியிடுகின்றனர் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலஸ்தீன பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது சட்டவிரோதமான...

2024-07-19 22:13:25
news-image

தகவல்தொழில்நுட்ப செயல் இழப்பு: சென்னையில் விமான...

2024-07-19 17:26:58
news-image

சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் ஒலித்த...

2024-07-19 15:20:38
news-image

தகவல்தொழில்நுட்ப செயல் இழப்பு - ஐரோப்பாவில்...

2024-07-19 15:13:12
news-image

கொலைக்களமாக மாறும் தமிழகம்; 200 நாட்களில்...

2024-07-19 14:46:25
news-image

பாரிய தகவல்தொழில்நுட்ப கோளாறு- சர்வதேச அளவில்...

2024-07-19 13:11:28
news-image

ஊடகங்கள் எனது தாத்தாவை வேறுவிதமாக சித்தரிக்கின்றன...

2024-07-19 12:41:32
news-image

இஸ்ரேலிய தலைநகரில் அமெரிக்க தூதரகத்தின் கிளை...

2024-07-19 10:44:48
news-image

சிலியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 

2024-07-19 10:31:16
news-image

பங்களாதேசில் வன்முறை தொடர்கின்றது – அரச...

2024-07-18 23:05:54
news-image

சவூதி அரேபிய அரசு, UpLink இணைந்து...

2024-07-18 17:11:17
news-image

வங்கதேச பயணத்தை தவிர்க்க இந்தியர்களுக்கு தூதரகம்...

2024-07-18 17:21:28