மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான அபிவிருத்தி குழுத் தெரிவு

Published By: Vishnu

06 Jun, 2024 | 01:33 AM
image

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கான அபிவிருத்தி குழு கடந்த பல வருடங்களாகச் செயற்படாதிருந்த நிலையில் தற்பொழுது புதிய நிர்வாகக் குழு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருக்கின்ற ஆளணிகளைக் கொண்டு அதிகாரிகள் தங்கள் கடமைகளை முன்னெடுத்து வருகின்றபோதும் இவ்வைத்தியசாலையில் பல தேவைகளும் , ஆளணி பற்றாக்குறைகளும் காணப்பட்டு வருகின்றது என பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வந்தன.

இருந்தபோதும் கடந்த பல வருடங்களாக மன்னார் மாவட்டத்தில் மிகவும் முக்கியம் வாய்ந்த இவ்வைத்தியசாலைக்கு என அபிவிருத்திக்குழு ஒன்று இயங்காதிருந்து வந்ததும் பலரால் நீண்டகாலமாகச் சுட்டிக்காட்டப்பட்டு வந்ததும் இங்குக் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்பொழுது இந்த வைத்தியசாலை அபிவிருத்தி குழுவின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.

இதற்கான புதிய நிர்வாகிகள் தெரிவுக்கான கூட்டம் செவ்வாய்க்கிழமை (04) மாலை 2.30 மணியளவில் மன்னார் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகதத்pன் கேட்போர் கூடத்தில் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எச்.முஹமட் ஹனிபா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

-இதன்போது இக்கூட்டத்தில் மன்னார் பொது வைத்தியசாலைக்கான புதிய அபிவிருத்திக்குழு தெரிவு இடம்பெற்றது.

இதில் தலைவராக வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி எம்.எச்.முஹமட் ஹனிபா , செயலாளராக திரு.எஸ்.ஜேம்ஸ் ஜேசுதாசன் (முன்னாள் மன்னார் நகர சபை உப தவிசாளர் மற்றும் ஓய்வுநிலை நிர்வாக உத்தியோகத்தர்) , பொருளாளராக ஜனாப் என்.நூர்தீன் நூன் (வர்த்தகர்) , உப தலைவராக திருமதி றெஜினா இராமலிங்கம் (ஓய்வுநிலை முன்னாள் கல்வி உதவிப் பணிப்பாளர்) , உப செயலாளராக ஜனாப் எம்.ஐ.ஏ.றசாக் (சமூகப் பணியாளர்) ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர்.

நிர்வாக உறுப்பினர்களாகத் திரு.எஸ்.பத்திநாதன் (போதகர்) திரு அழகிரி சூரியகுமார் (அதிபர்) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் இந்நிர்வாகத்தில் பதவிவழி உறுப்பினர்களாக

திரு. மனோகரன் பிரதீப் ( பிரதேச செயலாளர் மன்னார் நகரம்)

திரு. ஓ. றெனால்ட் லெம்பேட் ( செயலாளர் , நகர சபை மன்னார் )

திரு. சு. நிர்மலன் லெம்பேட் ( தொழில்நுட்ப அலுவலர் , கட்டிடங்கள் திணைக்களம் மன்னார் )

திரு புஸ்பகாந்தன் ஜோண் ( விஓஜி மாவட்ட பொது வைத்தியசாலை மன்னார்)

திரு. P. அனஸ்லி றொகான் ( கணக்காளர் , மாவட்ட பொது வைத்தியசாலை  மன்னார் )

திரு. .சீ.வை குரூஸ் (தாதிய பரிபாலகர் , மாவட்ட பொது வைத்தியசாலை , மன்னார் ) ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எம்.பிக்களுக்கு 122 கோடி ரூபா இழப்பீடு...

2025-02-09 17:19:20
news-image

பல பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம்...

2025-02-09 20:53:14
news-image

43 பாராளுமன்ற உறுப்பினர்கள் பெற்றுக்கொண்ட நட்டயீட்டை...

2025-02-09 17:26:07
news-image

யாழில் போதை மாத்திரைகளுடன் சந்தேகநபர் ஒருவர்...

2025-02-09 20:01:19
news-image

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் விரைவில் மக்கள்...

2025-02-09 17:22:43
news-image

புத்தளத்தில் வெளிநாட்டுத் துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர்...

2025-02-09 19:35:02
news-image

ராகமயில் பெண் கொலை : சந்தேகத்தில்...

2025-02-09 19:12:58
news-image

மதவாச்சியில் சட்ட விரோத சிகரெட்டுகளுடன் ஒருவர்...

2025-02-09 19:11:22
news-image

கெகலிய ரம்புக்கல பெற்ற நஷ்ட ஈட்டை...

2025-02-09 19:04:03
news-image

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட 150 பேருக்கான...

2025-02-09 18:42:17
news-image

அங்கொடையில் கடை மற்றும் இரண்டு வீடுகளில்...

2025-02-09 17:38:47
news-image

வவுனியாவில் வெள்ளத்தால் பாதிப்படைந்த 350 குடும்பங்களுக்கு...

2025-02-09 17:29:03