அயர்லாந்தை 8 விக்கெட்களால் வெற்றிகொண்டது முன்னாள் சம்பியன் இந்தியா

Published By: Vishnu

05 Jun, 2024 | 11:30 PM
image

(நெவில் அன்தனி)

நியூயோர்க் நசவ் விளையாட்டரங்கில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவடைந்த 9ஆவது ரி20 உலகக் கிண்ண அத்தியாயத்தின் ஏ குழுவுக்கான போட்டியில் அயர்லாந்தை 8 விக்கெட்களால் முன்னாள் சம்பியன் இந்தியா  வெற்றிகொண்டது.

அயர்லாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 97 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 12.2 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

ஆனால், இந்தியாவுக்கு வெற்றி இலகுவாக வந்துவிடவில்லை.

அயர்லாந்தின் வேகப்பந்துவீச்சாளர்கள் சமயோசிதமாக பந்துவீசியதால் அணித் தலைவர் ரோஹித் ஷர்மாவும் விராத் கோஹ்லியம் அவ்வப்போது தடுமாற்றத்திற்குள்ளாகினர்.

மூன்றாவது ஓவரில் மார்க் அடயாரின் பந்தை விசுக்கி அடித்த விராத் கோஹ்லி, தேர்ட் மேன் நிலையில் இலகுவான பிடிகொடுத்து ஒரு ஓட்டத்துடன் வெளியேறினார்.

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ரோஹித் ஷர்மாவும் ரிஷாப் பான்டும் முதலில் நிதானமாகவும் பின்னர் அதிரடியாகவும் துடுப்பெடுத்தாடி 2ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது ரோஹித் ஷர்மா உபாதை காரணமாக  ஓய்வு    பெற்றார்.

ரோஹித் ஷர்மா 4 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைப் பெற்று  ஓய்வு  பெற்றார்.

9ஆவது ஓவரில் ஜொஷ் லிட்ல் வீசிய பந்து ரோஹித் ஷர்மாவின் வலது முழங்கைக்கு மேல் தசைப் பகுதியை தாக்கியது. அதன் பின்னர் 10ஆவது ஓவரின் கடைசிப் பந்தில் ரோஹித் ஷர்மா வலி தாங்க முடியாமல் ஓய்வறைக்கு திரும்பினார்.

இதனிடையே ரோஹித் ஷர்மா ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் தனது 37ஆவது இன்னிங்ஸில் 1,000 ஓட்டங்களை (1,015) பூர்த்திசெய்தார்.

விராத் கோஹ்லி (1,142), மஹேல ஜயவர்தன (1,016) ஆகியோரைத் தொடர்ந்து ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் 1.000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்த 3ஆவது வீரரானார் ரோஹித் ஷர்மா.

அடுத்து களம் புகுந்த சூரியகுமார் யாதவ் 2 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார்.

எனினும் ரிஷாப் பான்ட் ஆட்டம் இழக்காமல் 36 ஓட்டங்களைப் பெற்று இந்தியாவின் வெற்றியை உறுதிசெய்தார்.

பந்துவீச்சில் மார்க் அடயா, பென் வைட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அயர்லாந்து 16 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 96 ஓட்டங்களைப் பெற்றது.

இந்திய பந்துவீச்சாளர்களிடம் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட அயர்லாந்து 12ஆவது ஓவரில் 8ஆவது விக்கெட்டை இழந்தபோது 50 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.

ஆனால், மத்திய வரிசை வீரர் கெரத் டிலேனி துணிச்சலுடன் துடுப்பெடுத்தாடி ஜொஷ் லிட்லுடன் 9ஆவது விக்கெட்டில் 27 ஓட்டங்களையும் பென் வைட்டுடன் கடைசி விக்கெட்டில் 19 ஓட்டங்களையும் பகிர்ந்து அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார்.

அவசரப்பட்டதன் காரணமாக ரன் அவுட் ஆன கெரத் டிலேனி 26 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றார்.

அவரை விட 10ஆம் இலக்க வீரர் ஜொஷ் லிட்ல் 14 ஓட்டங்களையும் கேர்ட்டிஸ் கெம்ஃபர் 12 ஓட்டங்களையும் லோக்கன் டக்கர் 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

அயர்லாதின் மொத்த எண்ணிக்கைக்கு 15 ஓட்டங்கள் உதிரிகளாக கிடைத்தது.

பந்துவீச்சில் ஹார்திக் பாண்டியா 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜஸ்ப்ரிட் பும்ரா ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 3 ஓவர்களில் 6 ஓட்டங்களுக்க 2 விக்கெட்களையும் அர்ஷ்தீப் சிங் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: ஆப்கானிஸ்தானுக்கு...

2025-12-17 18:02:45
news-image

ஒலிம்பிக் நிர்வாக சபையின் பதவிக்காலம் முடிவடைந்ததும்...

2025-12-17 17:21:39
news-image

பொண்டி தாக்குதலில் பலியானவர்களுக்கு மௌன அஞ்சலி...

2025-12-17 17:19:28
news-image

எதிர்கால மகளிர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை...

2025-12-17 15:11:02
news-image

ஐபிஎல் ஏலத்தில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர்...

2025-12-17 01:20:12
news-image

இலங்கை மகளிர் அணியில் இரண்டு கை...

2025-12-17 01:15:02
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: மலேசியாவை...

2025-12-17 01:10:43
news-image

பிரமோத்ய விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய இலங்கை...

2025-12-16 19:07:35
news-image

19இன் கீழ் ஆசிய கிண்ண தனிநபருக்கான...

2025-12-16 17:02:39
news-image

ஷார்ஜா வொரியர்ஸை வெற்றிப் பெறச் செய்தார்...

2025-12-16 14:42:13
news-image

ஆசிய இளையோர் பரா விளையாட்டில் இலங்கையின்...

2025-12-16 14:05:45
news-image

இலங்கை கிரிக்கெட்டின் முன்னாள் வீரர் டி.எஸ்....

2025-12-16 09:52:29