கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் விஞ்ஞான கணித உபகரண கண்காட்சி, மரம் நடுகை நிகழ்வுகள்

Published By: Digital Desk 7

05 Jun, 2024 | 06:11 PM
image

உலக சுற்றாடல் தினத்தை அடையாளப்படுத்தும் முகமாக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை கணித விஞ்ஞான மன்றம் ஏற்பாடு செய்த விஞ்ஞான கணித உபகரண கண்காட்சி மற்றும் மரம் நடுகை நிகழ்வுகள் இன்று புதன்கிழமை (05) காலை 8.30 மணிக்கு கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றன.

இந்நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக்கொடி, கலாசாலைக்கொடி, சுற்றாடல் கொடி என்பன ஏற்றிவைக்கப்பட்டன. அதை தொடர்ந்து தேசிய கீதம், சுற்றாடல் கீதம் என்பனவும் இசைக்கப்பட்டன. 

அதையடுத்து, ஆசிரிய மாணவர்களும் விரிவுரையாளர்களும் கலாசாலை சுற்றாடலை தூய்மையாக பேணுவோம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல் துறை முழுநிலை விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜாவும் சிறப்பு விருந்தினராக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் க. சுபோகரனும் கலந்துகொண்டனர். 

விஞ்ஞான நெறி ஆசிரிய மாணவன் இ. செந்தூர்ச்செல்வனின் நெறிப்படுத்தலிலான இந்நிகழ்வில் சுற்றாடல் பாதுகாப்பு பற்றிய ஆசிரிய மாணவர் உரையினை கணித நெறி ஆசிரிய மாணவன் ச. சந்திரகுமார் ஆற்றினார்.

வரவேற்புரையினை ஆசிரிய மாணவி த. கீற்றாவும், விருந்தினர்கள் தொடர்பான அறிமுக உரையை கல்வி அபிவிருத்திக்கான பிரதி அதிபர் த. கோபால கிருஷ்ணனும் ஆற்றினர்.

அதிதிகளின் உரையைத் தொடர்ந்து விஞ்ஞான கணித ஆசிரிய மாணவர்களிடையே நடத்தப்பட்ட விஞ்ஞான வினாடி வினா போட்டிக்கான பரிசளிப்பு நடைபெற்றது.

தொடர்ந்து, சூழலை நேசிக்கும் உணர்வுடன் மரங்கள் நடப்பட்டன. இந்த மரங்களை பிரதம விருந்தினர் கலாநிதி த. பிரதீபராஜா, கலாசாலை அதிபர் ச. லலீசன், யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளர்களான த. அம்பிகைபாகன் மற்றும் இ. சயந்தன் ஆகியோர் நட்டுவைத்தனர்.

நிகழ்வின் நிறைவாக, கணித விஞ்ஞான உபகரண கண்காட்சிக் கூடத்தை பிரதம விருந்தினர் திறந்துவைத்தார். 

ஆரம்ப கல்வி மற்றும் இடைநிலை கல்வியில் உள்ள விஞ்ஞான கணித உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அருகிலுள்ள பாடசாலை மாணவர்களுடன் கலாசாலை மாணவர்களும்  இக்கண்காட்சியை பார்வையிட்டு பயன் பெற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 இந்து பெருஞ்சமய அமைப்புகள், மன்றங்கள்...

2024-06-21 20:20:53
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் 

2024-06-21 15:54:06
news-image

கொட்டாஞ்சேனை மத்திய இந்து மகா வித்தியாலயத்தில்...

2024-06-21 13:40:31
news-image

கொழும்பு விவேகானந்த சபையின் பன்னிரு திருமுறை...

2024-06-21 13:21:24
news-image

கரவை மு. தயாளனின் 'கரும்பலகை' நாவல்,...

2024-06-21 16:11:33
news-image

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன்...

2024-06-20 18:45:49
news-image

'ஈழத்து திருச்செந்தூர்' மட்டு. கல்லடி முருகன்...

2024-06-21 17:28:48
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவம் 

2024-06-20 17:18:18
news-image

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய தேர் திருவிழா 

2024-06-20 16:56:32
news-image

2024 ஆம் ஆண்டுக்கான கொரிய சர்வதேச...

2024-06-20 20:01:28
news-image

கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய பழைய...

2024-06-20 14:18:54
news-image

வட்டுக்கோட்டை நீளத்திகாடு பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் அலங்கார...

2024-06-19 17:35:14