திருகோணமலை சாஹிரா பாடசாலை மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவோம் - கல்வி அமைச்சர் 

05 Jun, 2024 | 05:48 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

திருகோணமலை சாஹிரா பாடசாலை மாணவிகளின் உயர்தர பரீட்சை பெறுபேறுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுப்போம். அது தொடர்பான நடவடிக்கை தற்போது இடம்பெறுகிறது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம்பெற்ற நாட்டின் கல்வி நடவடிக்கைகளில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தின்போது முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே கல்வி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

ரவூப் ஹக்கீம் குறிப்பிடுகையில், தலையை மறைத்து ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதிய திருகோணமலை சாஹிரா பாடசாலை மாணவிகளின் பரீட்சை பெறுபேறு இடை நிறுத்தப்பட்டிருக்கிறது. ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுதுவதற்கு தடை எதுவும் இல்லை. பரீட்சை மண்டபத்தில் அவர்கள் தங்களின் காதுகளை வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டால் அந்த நேரத்தில் அதனை வெளிப்படுத்திவிட்டு பரீட்சையை எழுதலாம். மாறாக தலை மறைப்பை முழுமையாக அகற்றிவிட தேவையில்லை.

அதனால் இந்த விடயம் தொடர்பாக முறையான சுற்று நிருபம் ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுப்பதுடன் இந்த மாணவிகளின் பரீட்சை பெறுபேற்றை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இதற்கு அமைச்சர் தொடர்ந்து பதிலளிக்கையில், மாணவர்களின் பரீட்சை பெறுபேறு தொடர்பில் பல இடங்களுக்கும் எடுத்துக்கூறியபோது, அதற்கு அவர்கள் இணக்கம் தெரிவித்திருக்கிறார்கள்.

திருகோணமலை பாடசாலை மாணவர்கள் தொடர்பான பிரச்சினை வந்தபோது, அது தொடர்பான தகவல்களை பெற்றுக்கொண்டோம். அது தொடர்பான விசாரணை முடிவுக்கு கொண்டுவந்து, மாணவர்களின் பெறுபேற்றினை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுப்போம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

திருமலையில் தமிழ் அரசுடன் இணைந்து ஜனநாயக...

2024-10-09 09:58:49
news-image

தேசிய மக்கள் சக்தி வேட்பாளர்கள் வேட்புமனுவில்...

2024-10-09 09:35:13
news-image

ஜனாதிபதி அநுரவுடன் டக்ளஸ் தொலைபேசியில் உரையாடல்

2024-10-09 09:25:22
news-image

பதிவு செய்யாமல் லெபனானில் பணிபுரியும் இலங்கை...

2024-10-09 09:34:37
news-image

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அவசியமற்றது; ஜனாதிபதிக்கு...

2024-10-09 09:38:20
news-image

சம்மாந்துறையில் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்திய தனியன்...

2024-10-09 09:02:30
news-image

சில பகுதிகளில் அடிக்கடி மழை பெய்யும்

2024-10-09 08:56:52
news-image

11 வயது மாணவி மீது பாலியல்...

2024-10-09 09:20:09
news-image

யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா: வெளியானது...

2024-10-08 23:45:49
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கையில்...

2024-10-08 17:09:54
news-image

உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதியே இறக்குமதி...

2024-10-08 17:11:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிய...

2024-10-08 17:09:23