(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
பர்தா அணிந்து பரீட்சை எழுதியமைக்காக திருகோணமலை மாவட்ட ஸாஹிரா கல்லூரி மாணவிகளின் பரீட்சை பெறுபேறு நிறுத்திவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அத்துடன் இதற்கு காரணமான அதிகாரிகள் தொடர்பாகவும் விசாரணை நடத்த வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
திருகோணமலை ஸாஹிரா கல்லூரியில் இருந்து இம்முறை கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எழுதிய 70 மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டிருப்பது தொடர்பில் அறியக்கிடைத்துடன் இது தொடர்பாக நாங்கள் பாடசாலை அதிபர் மற்றும் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியுடன் கதைத்து இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராந்து பார்த்தோம். இந்த மாணவிகள் 70பேரும் திருகோணமலை ஜென்ஜோசப் என்ற பாடசாலையிலேயே பரீட்சை எழுதியுள்ளனர். பரீட்சை எழுதும்போது இவர்கள் இஸ்லாமிய முறைப்படி தலையை மறைத்து பர்தா அணிந்து பரீட்சை எழுதினார்கள் என்பதே இவர்களுக்கு எதிராக தெரிவிக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு.
ஆனால் குறித்த மாணவிகள் பரீட்சை எழுதும்போது, பரீட்சை மண்டபத்துக்கு பொறுப்பாக இருந்த அதிகாரி ஒருவர் அவர்களிடம் வந்து, காதுகள் தெரியும் வகையில் பர்தாவை அணிந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். அதன் பிரகாரம் அந்த மாணவிகளும் அவ்வாறு செயற்பட்டுள்ளனர். ஆனால் பரீட்சை எழுதிக்கொண்டிருக்கும்போதே அந்த மண்டபத்தில் இருந்த அதிகாரிகள் சிலர், அந்த மாணவிகளுக்கு கேட்கும்வகையில், உங்கள் பரீட்சை பெறுபேறுகள் வருவதை நாங்கள் பார்த்துக்கொள்வோம் என பல தடவைகள் அங்கு வந்து தெரிவித்துள்ளார்கள்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஏப்ரல் 25ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்துக்கு குறித்த மாணவிகளை அழைத்து விசாரணை நடத்தியுள்ளர். இதன்போது விசாரணை நடத்திய அதிகாரிகள் அந்த மாணவிகளிடம், பரீட்சை ஆணையாளர் எடுக்கின்ற தீர்மானத்துக்கு கட்டுப்படுவோம் என தெரிவித்து எழுத்துமூலமான கடிதம் ஒன்றை பெற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் இதுவரை அவர்களின் பெறுபேறுகள் வரவில்லை.. இது தொடர்பாக ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவிடம் முறையிட்டேன். விரைவாக இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த நாட்டில் ஒருபோதும் இடமபெறாத ஒருவிடயமாகும். பெண்களின் உரிமைகள் தொடர்பாக கதைக்கிறோம். ஆனால் இன்று 70 பெண் பிள்ளைகளின் பரீ்ட்சை பெறுபேறுகள் இடை நிறுத்தப்பட்டிருக்கின்றன. அவர்கள் முஸ்லிம்கள் என்ற காரணத்தினாலே இதனை செய்திருக்கிறார்கள். தலையை மறைத்தார்கள் என்பதற்காக அவர்களின் பரீட்சை பெறுபேறுகளை நிறுத்திவைப்பது எந்த வகையில் நியாயம் என கேட்கிறோம்.
அதேநேரம் மாணவிகளை விசாரணை நடத்திய அதிகாரிகள் மற்றும் பரீட்சை மண்டபத்தில் இருந்தவர்களின் பெயர்களை வெளிப்படுத்த வேண்டும். இவர்கள் துவேச அடிப்படையிலேயே நடந்துகொண்டுள்ளனர். எனவே பரீட்சை ஆணையாளருடன் இதுதொடர்பாக கலந்துரையாடி உடனடியாக அந்த மாணவிகளின் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட நடவடிக்கைஎடுக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM