இந்திய நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி, 290-க்கும் அதிகமான இடங்களில் பாரதிய சனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பாரதிய சனதா கட்சி 160க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.க. வேட்பாளர் பிரதமர் மோடி வெற்றி பெற்றார்.
இவர் 6,12,970 வாக்குகள் பெற்றார். 3-வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க மக்கள் வாய்ப்பு கொடுத்துள்ளனர் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தொடர்ந்து 3வது முறையாக வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி.
நாட்டு மக்களுக்கு உழைக்க வேண்டும் என்ற உத்வேகத்தை தேர்தல் வெற்றி கொடுத்துள்ளது.
இவ்வளவு பெரிய அளவிலான தேர்தல் பயிற்சியை நடத்திய இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நன்றி.
இந்தியாவின் தேர்தல் செயல்முறை மற்றும் முறையின் நம்பகத்தன்மை குறித்து ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM