(நெவில் அன்தனி)
ப்றிஜ்டவுனில் இலங்கை நேரப்படி இன்று செவ்வாய்க்கிழமை (4) இரவு 8.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ள பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன் இங்கிலாந்தை ஸ்கொட்லாந்து சந்திக்கவுள்ளது.
இந்த இரண்டு அணிகளும் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும்.
இற்றைக்கு 154 வருடங்களுக்கு முன்னர் கெனிங்டல் ஓவல் விளையாட்டரங்கில் இங்கிலாந்தும் ஸ்கொட்லாந்தும் உத்தியோகப்பற்றற்ற கால்ப்தாட்டப் போட்டித் தொடரில் முதன் முதலாக ஒன்றையொன்று எதர்த்தாடி இருந்தன.
ஒரு வருடம் கழித்து இரண்டு நாடுகளும் எடின்பேர்க், ரேபேர்ன் ப்ளேஸ் மைதானத்தில் முதலாவது சர்வதேச றக்பி போட்டியில் சந்தித்தன.
அதனைத் தொடர்ந்து 1872இல் இரண்டு நாடுகளும் க்ளாஸ்கோ, ஹெமில்டன் க்ரசென்ட் விளையாட்டரங்கில் முதல் தடவையாக சர்வதேச கால்பந்தாட்டப் போட்டியில் மோதின.
எனினும், பெரிய பிரித்தானியாவில் மூன்றாவது பெரும் விளையாட்டுப் போட்டியான கிரிக்கெட்டில் இரண்டு நாடுகளும் ஒரு நூற்றாண்டுப் பின்னரே ஒன்றையொன்று எதிர்த்தாடின.
எடின்பேர்க், ரேபேர்ன் ப்ளேஸ் விளையாட்டரங்கில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் 2008இல் நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 144 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இங்கலாந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடியபோது மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டது.
ஆறு வருடங்கள் கழித்து அட்லான்டா கடலைக் கடந்து சென்று இரண்டு நாடுகளும் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இன்று மோதவுள்ளன.
இதுவரை சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 6 தடவைகள் சந்தித்துக்கொண்ட இங்கிலாந்தும் ஸ்கொட்லாந்தும் முதல் தடவையாக ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடவுள்ளன.
இந்த இரண்டு அணிகளும் கடைசியாக 2018இல் விளையாடிய சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்கொட்லாந்து 6 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. மற்றைய 3 போட்டிகளில் இங்கிலாந்து வெற்றிபெற்றிருந்தது.
2018இல் நடைபெற்ற போட்டியில் சதம் குவித்த ரிச்சி பெறிங்டன் இப்போது ஸ்கொட்லாந்து அணியின் தலைவராக விளையாடுகிறார். அத்துடன் அப் போட்டியில் ஸ்கொட்லாந்து சார்பாக விளையாடிய ஜோர்ஜ் மன்சே, மெத்யூ க்ரொஸ், மைக்கல் லீஸ்க், மார்க் வொட், கிறிஸ் சோல் ஆகிய ஐவர் ரி20 அணியிலும் இடம்பெறுகின்றனர்.
இங்கிலாந்து அணியில் அப்போது இடம்பெற்ற அணித் தலைவர் ஜொனி பெயாஸ்டோவ், மொயீன் அலி, ஆதில் ராஷித் ஆகியோர் ரி20 உலகக் கிண்ண அணியிலும் இடம்பெறுகின்றனர்.
இன்று நடைபெறவுள்ள பி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் இங்கிலாந்து ஜமாய்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் 2 வருடங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடிய 7 வீரர்கள் ஸ்கொட்லாந்து அணியில் இடம்பெறுவது அவ்வணிக்கு பலம் சேர்ப்பாதாக அமைகிறது.
எனினும் அண்மைய போட்டி பெறுபேறுகளின் பிரகாரம் இங்கிலாந்து பலம் வாய்ந்த அணியாகத் தென்படுகிறது.
ஆனால், ரி20 உலகக் கிண்ணத்தில் ஸ்கொட்லாந்து அழுத்தத்தை எதிர்கொள்ளாது என்பதால் அவ்வணி இங்கிலாந்துக்கு சவால் விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அணிகள்
இங்கிலாந்து: ஜொஸ் பட்லர் (தலைவர்), பில் சோல்ட், வில் ஜெக்ஸ், ஜொனி பெயாஸ்டோவ், ஹெரி ப்றூக், மொயீன் அலி, லியாம் லிவிங்ஸ்டோன், கிறிஸ் ஜொர்டன், ஜொவ்ரா ஆச்சர், ஆதில் ரஷித், ரீஸ் டொப்லே.
ஸ்கொட்லாந்து: ரிச்சி பெறிங்டன் (தலைவர்), ஜோர்ஜ் மன்சே, மைக்கல் ஜோன்ஸ், ப்றெண்டன் மென்முலன், மெட் க்ரொஸ், மைக்கல் லீஸ்க், கிறிஸ் க்றீவ்ஸ், மார்க் வொட், ப்றட் வீல், கிறிஸ் சோல், ப்றெட் கியூரி.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM