அரச நிதி முகாமைத்துவ சட்டமூலம் : திருத்தங்கள் அமைச்சரவைக்கு முன்வைப்பு - நிதி இராஜாங்க அமைச்சர்!

04 Jun, 2024 | 05:41 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)  

பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள  அரச நிதி முகாமைத்துவ சட்டமூலத்தில் மேலதிகமாக  உள்ளடக்கப்பட  வேண்டிய ஒருசில திருத்தங்கள் அமைச்சரவைக்கு முன்வவைக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபரிடம் சட்ட ஆலோசனை கோரியுள்ளோம். வெகுவிரைவில் திருத்தப்பட்ட சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது, 

அரச நிதி முகாமைத்துவம் சட்டமூலம் தொடர்பில் அரசாங்க நிதி தொடர்பான குழு முன்வைத்துள்ள யோசனைகள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். சட்டமூலத்தின் ஒருசில பிரிவுகள் குறித்து அமைச்சரவை திருத்த யோசனைகளை முன்வைத்துள்ளது. சட்டமா அதிபரின் ஆலோசனை கோரப்பட்டுள்ளது. ஆகவே வெகுவிரைவில் திருத்தப்பட்ட வகையில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும்.

அரச நிதி முகாமைத்துவம் நாட்டுக்கு மிக முக்கியமானது. கடந்த கால தவறுகளை திருத்திக் கொண்டு நிதி ஒழுக்கத்தை சிறந்த முறையில்  கடைபிடிப்பது இந்த சட்டமூலத்தின் பிரதான நோக்கமாகும். ஆகவே இந்த சட்டமூலத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுகிறது.  

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் ஒருசில குறைப்பாடுகள் காணப்படுகிறது என்பதை ஏற்றுக்கொள்கிறோம். இரண்டாம் கட்ட  விண்ணப்பம் கோரல் இம்மாதம் கோரப்படும். ஆகவே எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் தகவல் விண்ணப்பங்களின் உண்மை தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நலன்புரி கொடுப்பனவு வழங்கலில் கடந்த 30 ஆண்டுகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்ட தவறான வழிமுறைகள் அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் ஊடாக திருத்தப்பட்டுள்ளது. நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள  பிரச்சினைகளை தீவிரப்படுத்தி நெருக்கடிகளை தீவிரப்படுத்த ஒருதரப்பினர் முயற்சிக்கின்றனர் என்றார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குருணாகல் - கொழும்பு பிரதான வீதியில்...

2025-01-18 12:03:28
news-image

நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி...

2025-01-18 11:50:50
news-image

திருகோணமலையில் இலங்கை தமிழ் அரசு கட்சியின்...

2025-01-18 11:53:22
news-image

மஸ்கெலியாவில் 08 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக...

2025-01-18 11:42:21
news-image

களுத்துறையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-01-18 11:35:22
news-image

மட்டக்களப்பு வாவியில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு

2025-01-18 11:31:04
news-image

முகத்துவாரத்தில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது...

2025-01-18 11:12:51
news-image

25ஆம் திகதி சந்திப்பு முக்கிய திருப்புமுனையின்...

2025-01-18 11:17:23
news-image

மாத்தறையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர்...

2025-01-18 11:15:47
news-image

கடலில் மிதந்த நிலையில் பெண்ணின் சடலம்...

2025-01-18 10:48:36
news-image

எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்தனர் ஐரோப்பிய ஒன்றிய...

2025-01-18 10:27:43
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக...

2025-01-18 10:17:40