சட்டவிரோத மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இலங்கை மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த 8 மீனவர்களும் மன்னார்  கடற்பிராந்தியத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட மீனவர்களிடமிருந்து 2 படகுகள், 220 மீற்றர் நீளமான இரு மீன்பிடி வலைகள், மற்றும் 10 கிலோ நிறையுடைய மீன்கள் ஆகியவற்றை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கைப்பற்றிய பொருட்களையும் கைதுசெய்யப்பட்ட மீனவர்களையும் மேலதிக விசாரணைக்காக மன்னார் மீன்பிடித்துறை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளனர்.