ஜே.வி.பி உடன் இணக்கப்பாடு எட்டப்பட்டால், பொது வேட்பாளர் விடயம் கைவிடப்படுமா? - சிறிரங்கேஸ்வரன் கேள்வி

04 Jun, 2024 | 04:46 PM
image

பொது வேட்பாளர் விடயத்தை முன்னெடுக்கும் குழுவுடன் ஜே.வி.பியினர் சந்திப்பொன்றை நடாத்தி, அதில் இரு தரப்பினருக்கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டால், பொது வேட்பாளர் விடயம் கைவிடப்படுமா? என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை சிறிரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

யாழ். ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (04) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.    

தமிழரசுக் கட்சிக்குள் உட்பூசல் உச்சமடைந்திருந்த சமயத்தில் பொது வேட்பாளர் தொடர்பாக தமிழரசுக் கட்சி தங்களுக்குள் உள்ள தலைமைப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்த பின் தங்களிடம் பேச வரட்டும் என ஏளனமாக கூறிய சுரோஸ் பிரேமச்சந்திரன் தற்போது தமிழரசுக் கட்சி சரியான முடிவை மிக விரைவாக எடுத்து எல்லோருடனும் இணைந்து பயணிப்பதானது தேவையான விடயம் என இரந்து நிற்பதை காணக்கூடியதாக உள்ளது. 

ஆயினும், தமிழரசுக் கட்சி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனம்  வந்த பின்னர் தமது முடிவை எடுக்கவுள்ளதாக கூறிவருகின்றது. அதேவேளை பொது வேட்பாளர் என்பது ஒரு விஷப் பரீட்சை என அக்கட்சி தெரிவித்துள்ளது. 

அதேவேளை, எதிர்வரும் 9 ஆம் திகதி பொது வெளியில் இது தொடர்பாக விவாதிப்பதற்கு அறிவித்தல் ஒன்றையும் விடுத்துள்ளது.  

அதில், எவ்வாறான நிலைப்பாட்டை தமிழரசு கட்சியினர் எடுப்பார்கள் என்பதை தெரிந்து கொண்ட சுரேஸ் அணியினர் மிக மிக விரைவாக முடிவெடுக்குமாறு கோரியுள்ளனர். 

அத்துடன், ஜே.வி.பினர் பொது வேட்பாளர் தொடர்பான தரப்பினரை எதிர்வரும் வாரம் சந்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. 

இச்சந்திப்பின்போது ஜே.வி.பியினருடன் பொது இணக்கப்பாடு ஒன்று எட்டப்பட்டால் தத்தமது நலன்களுக்காக முகவர்களுக்கு பின்னால் இருந்து இயங்கும் இவர்கள் பொது வேட்பாளர் விடயம் கைவிட்டுவிடுவார்களா? அதன்பின்னர் மக்களுக்கு எதை கூறி மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றுவார்கள் ? என மேலும் தெரிவித்திருந்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41
news-image

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்படாவிட்டால் இணைவு...

2025-02-17 17:45:28
news-image

வரவு - செலவுத் திட்டத்தின் மீதான...

2025-02-17 21:38:19