தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நானுஓயா பிரிவு தோட்ட தொழிலாளர்கள் இன்று (04) செவ்வாய்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
களனிவெளி பெருந்தோட்ட முகாமைத்துவ நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் தலவாக்கலை நானுஓயா தோட்ட பிரிவில் ஓய்வு பெற்ற தொழிலாளர் ஒருவரை நேற்று (03) திங்கட்கிழமை மீண்டும் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என தோட்ட அதிகாரி கூறியுள்ளார். அதனை மறுத்த தொழிலாளரை தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசி அவரை தாக்க முற்பட்டுள்ளார் இதனால் தோட்ட மக்களுக்கும் தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த முரண்பாட்டுக்கு எதிராகவும், தோட்டத்தில் ஓய்வு பெற்ற தொழிலாளியை தரம் குறைவாக பேசி தாக்க முற்பட்டற்கும் எதிராகவும், மேலதிக நேரம் தொழில் செய்தாலும் உரிய கொடுப்பனவு வழங்காததிற்கும், எதிர்ப்பு தெரிவித்தும் வேலை நாட்கள் குறைக்கப்படுவதற்கும் தோட்டத்தில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்காதற்கும், சிறிய தவறு செய்தாலும் கடுமையாக எச்சரிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் இந்த பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM