எம்மில் சிலர் அவர்களுக்கு தெரிந்த பரிச்சயமான தொழிலில் ஈடுபட்டிருப்பர். அதில் நாளாந்தம் குறைவான தொகை தான் லாபமாகவோ அல்லது வருவாயாகவோ கிடைக்கும். அந்தத் தொழிலில் முதலீட்டை அதிகரித்து கடுமையாக உழைத்து முன்னேற வேண்டும் என்ற இலக்கு இருந்தாலும் இதனை எதையும் சாத்தியப்படுத்த இயலாமல் தவிப்பர்.
மேலும் வேறு துறைகளில் கவனம் செலுத்தி முன்னேற வேண்டும் என்ற ஆர்வம் இருந்தாலும், 'தெரியாத தொழிலை செய்தவனும் கெட்டான்: தெரிந்த தொழிலை கைவிட்டவனும் கெட்டான்' என்ற பழமொழியை உங்களது நண்பர்களாக இருக்கும் மறைமுக போட்டியாளர்கள் தொடர்ச்சியாக உங்களிடம் எடுத்துரைத்து உங்களது மன வலிமையை குறைத்து விடுவர். உங்களுக்கும் வேறு துறையில் ஈடுபட்டு முன்னேற வேண்டும் என்ற எண்ணமும், அதற்கான செயல் திட்டமும், அதற்குரிய வேகமும் குறைந்துவிடும். இதனால் வேறு வழி இன்றி உங்களையே நொந்து கொண்டு காலத்தை கடத்துவீர். இவரைப் போன்றவர்கள் தொழிலதிபர்களாக உயர்வதற்கான எளிய பரிகாரங்களை எம்முடைய முன்னோர்கள் முன்மொழிந்திருக்கிறார்கள்.
உங்களது ஜாதகத்தில் லக்னம் எதுவாக இருந்தாலும் அந்த லக்னத்திற்கு பத்தாம் இடத்தின் அதிபதி மகர ராசியில் இருந்தால் உதாரணமாக நீங்கள் ரிஷப லக்னமாக இருக்கிறீர்கள் என்றால் உங்களுடைய பத்தாம் இடமான மகர வீட்டின் அதிபதியான சனி பகவான் உங்களுடைய ராசி கட்டத்தில் மகர ராசியில் இருந்தால் நீங்கள் சிறந்த தொழிலதிபராக உயர்வதற்கான எளிய பரிகாரங்களை எம்முடைய முன்னோர்கள் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்கள்.
நீங்கள் நாளாந்தம் உணவருந்த சிரமப்படுபவர்களுக்கோ அல்லது உங்களிடம் யாசகம் கேட்பவர்களுக்கோ வாழைப்பழம், துவரம் பருப்பு, இனிப்பு இவற்றில் ஏதேனும் ஒன்றை தானமாக வழங்கினால் உங்களது தொழில் சிறக்கும். துவரம் பருப்பை நேரடியாக வழங்க இயலாது என்றால் துவரம் பருப்பினை கொண்டு செய்யப்படும் உணவுப் பொருளை தானமாக வழங்கலாம்.
தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் ஆண்களாக இருந்தால் அதிலும் திருமணமானவராக இருந்தால் மனைவியையும் , திருமணமான பெண்மணியாக இருந்தால் கணவனையும் தவிர்த்து, வேறு யாரையும் தவறாக எண்ணக்கூடாது. தொழில் செய்யும் இடத்தில் தவறான எண்ணத்தில் பார்த்தால் கூட அவர்களுக்கு தரித்திர நிலை ஏற்பட்டு, தொழிலில் இறங்கு முகமும், நஷ்டமும் உண்டாகும்.
கேது பகவானின் ப்ரீத்தி மந்திரத்தை தொடர்ச்சியாக உச்சரித்துக் கொண்டே இருக்கலாம். இதன் மூலம் தொழிலில் உண்டாகும் மறைமுக போட்டியாளர்கள் விலகி விடுவர்.
கேது பகவானை தொடர்ச்சியாக வணங்க வேண்டும். கேது பகவானின் அதி தேவதையென அடையாளப்படுத்தப்படும் விநாயகப் பெருமானுக்கு திங்கட்கிழமைகளில் அபிஷேகம் செய்து வணங்கி வந்தால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.
கருப்பு மற்றும் ரோஸ் வண்ணத்திலான உடைகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டாலோ அல்லது தொழிலை தொடர்ந்து நடத்த இயலாத அளவிற்கு முடங்கி விட்டாலோ உங்களது வீட்டிற்கு அருகே இருக்கும் கிணற்றில் ஒரு கிராம் அல்லது இரண்டு கிராம் அளவிற்கு வெள்ளி நாணயங்களை வாங்கி, அதனை கிணற்றுக்குள் இருக்கும் நீருக்குள் வீசி விட வேண்டும். இதனை சனிக்கிழமைகளில் மேற்கொள்ளலாம். சனிக்கிழமைகளில் மேற்கொள்ள இயலாத சூழல் இருந்தால் அல்லது மறந்து விட்டால் சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரம் வரும் நாட்களில் இதனை மேற்கொண்டால் உங்கள் தொழிலில் இருந்து வந்த முடக்கம் நீக்கம் பெற்று, லாபம் உண்டாகும்.
உங்களது தொழில் நடத்தும் நிலையத்தை அல்லது அலுவலகத்தை கிழக்கு நோக்கிய வாசல் கொண்டதாக அமைத்துக் கொண்டால் சுப பலன் கிட்டும் அல்லது நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்தாலும் லாபம் மற்றும் முன்னேற்றம் ஏற்படும்.
உங்களது லக்னம் எதுவாக இருந்தாலும் லக்னத்திற்கு பத்தாம் வீட்டின் அதிபதி மகர ராசியில் இருந்தால் மேலே சொன்ன எளிய பரிகாரங்களை ஒருமுகமான மனதுடன் முழு நம்பிக்கையுடன் செய்து வாழ்வில் சிறந்த தொழிலதிபராக உயருங்கள்.
தொகுப்பு : சுபயோக தாசன்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM