(நெவில் அன்தனி)
பங்களாதேஷில் இந்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணம், இந்தியாவில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் உலகக் கிண்ண (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி ஆகியவற்றுக்கு முன்னோடியாக இலங்கையும் மேற்கிந்தியத் தீவுகளும் இருவகையான மகளிர் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் தொடர்களில் விளையாடவுள்ளன.
இந்த இரண்டு அணிகளும் 3 போட்டிகளைக் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அதே அளவு போட்டிகளைக் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரிலும் விளையாடவுள்ளன.
இரண்டு வகை தொடர்களில் விளையாடுவதற்காக மேற்கிற்தியத் தீவுகளின் மகளர் அணி இலங்கைக்கு வருகை தந்துள்ளது.
இந்த இரண்டு அணிகளும் மகளிர் உலகக் கிண்ண (50) கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதிபெறுவதாக இருந்தால் ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் நிறைவில்அணிகளுக்கான தரவரிசையில் முதல் 6 இடங்களுக்குள் இருக்க வேண்டும்.
தரவரிசையில் முதல் 5 இடங்களில் உள்ள அணிகளும் வரவேற்பு நாடான இந்தியாவும் நேரடியாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட தகுதிபெறும். மற்றைய இரண்டு இடங்கள் தகுதிகாண் சுற்றின் மூலம் தீர்மானிக்கப்படும்.
இது இவ்வாறிருக்க, பங்களாதேஷில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்னர் இரண்டு அணிகளும் தங்களது பலத்தை ரி20 தொடரில் பரீட்சிக்கவுள்ளன.
இரண்டு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடர் காலியில் ஜூன் 15, 18, 21ஆம் திகதிகளில் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து ஹம்பாந்தோட்டையில் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரீ20 கிரிக்கெட் தொடர் ஜூன் 24, 26, 28ஆம் திகதிகளில் நடைபெறும்.
இலங்கை மகளிர் அணி இநதத் தொடருக்குப் பின்னர் அயர்லாந்துக்கு எதிரான தொடரில் விளையாடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM