இன்றைய சூழலில் தெற்காசிய நாடுகளில் பிறக்கும் நூறு குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு பிறவி இதய குறைபாடு பாதிப்பு இருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும் இத்தகைய குறைபாட்டை உரிய தருணத்தில் கண்டறிந்து இதற்கான நவீன சத்திர சிகிச்சையை மேற்கொண்டால் பாதிப்பிலிருந்து முழுமையான நிவாரணம் பெறலாம் என வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பிறக்கும் குழந்தைகளுக்கு இதய செயலிழப்பு பாதிப்பு என்பது ஏற்படக்கூடும். அதிலும் குறிப்பாக பிறவி இதய குறைப்பாடுடன் பிறக்கும் குழந்தைகளில் 30 சதவீதத்தினருக்கு க்ரிட்டிக்கல் காஞ்சினென்டல் ஹார்ட் டிசீஸ் எனப்படும் சிக்கலான இதய பாதிப்பு ஏற்படும். இத்தகைய பாதிப்புள்ள குழந்தைகளை உரிய தருணத்தில் பாதிப்பினை துல்லியமாக அவதானித்து சத்திர சிகிச்சை அளிக்காவிடில்.. அவர்கள் உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம். பெரும்பாலான தருணங்களில் குழந்தைகளுக்கு பிறவியிலேயே இதய பாதிப்பு இருப்பதை சற்று தாமதமாகத்தான் கண்டறிய முடிகிறது. இதனால் அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இந்நிலையில் இதனை தவிர்க்க வைத்திய நிபுணர்கள் குழந்தை, தாயின் கருவறையில் இருக்கும் போதே அதாவது மூன்று, நான்கு அல்லது ஐந்தாம் மாதத்தில் பீட்டல் எக்கோ கார்டியோகிராஃபி ( Fetel Echocardiography) எனும் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறார்கள். இந்த வகையினதான அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சோதனை மூலம் தாயின் கருவறையில் இருக்கும் குழந்தையின் இதயத்துடிப்பு மற்றும் இதய ஆரோக்கியம் குறித்து துல்லியமாக அவதானிக்க இயலும். இதனால் கருவுற்றிருக்கும் தாய்மார்கள் அனைவரும் வைத்திய நிபுணர்களின் அறிவுரைப்படி பீட்டல் எக்கோகார்டியோகிராபி எனும் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையை அவசியம் செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் உங்களது குழந்தை, பிறவி இதய குறைபாடுடன் பிறப்பதை தவிர்க்க முடியும்.
மேலும் இத்தகைய பரிசோதனையின் போது குழந்தைக்கு பிறக்கும் போதே இதய குறைபாடு இருப்பதை உறுதி செய்தால்... குழந்தை பிறந்தவுடன் அதற்குரிய பிரத்யேக சத்திர சிகிச்சை நிபுணர்கள் மூலம் சத்திர சிகிச்சை மேற்கொண்டு பாதிப்பிற்கு முழுமையான நிவாரணத்தை பெறலாம்.
வைத்தியர் முத்துக்குமரன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM