பான் ஏசியா வங்கியுடன் இலங்கையின் தேசிய வர்த்தக சம்மேளனம் (NCCSL) சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SME) அபிவிருத்தியை பெருக்க பங்குதாரர்களாக இணைவு!

04 Jun, 2024 | 11:51 AM
image

பான் ஏசியா  பேங்கிங்  கோர்ப்பரேஷன்  PLC மற்றும் இலங்கையின் தேசிய வர்த்தக சம்மேளனம் (NCCSL) ஆகிய இரு நிறுவனங்களும், நாடு முழுவதும் உள்ள சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகளின் (SME) வளர்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு கூட்டாண்மையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றன. SME துறையை ஆதரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இரு சாராரும் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பை இந்த ஒத்துழைப்பு வலியுறுத்துகிறது, SME துறையின்முக்கியத்துவத்தை உணர்ந்து கொண்டிருக்கும் பான் ஏசியா வங்கி  மற்றும் NCCSL ஆகியவை இலக்கு அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் பட்டறைகளை வழங்குவதன் மூலம் அந்தத்  துறைக்கு ஆதரவளிக்க தம்மை அர்ப்பணித்துள்ளன.

 NCCSL இன் ஆதரவுடன், பான் ஏசியா வங்கியானது உள்நாட்டிலுள்ள சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்களின் அபிவிருத்திக்கு வலுவூட்டும் நோக்கத்துடன் இலங்கை முழுவதும் பட்டறைகளை நடத்தவுள்ளது. இந்த செயலமர்வுகள் SME தொழில்முனைவோருக்கு அவர்களின் வியாபார வளர்ச்சிக்கு அவசியமான நடைமுறை அறிவு மற்றும் திறன்களை வழங்கும் வகையில் வடிவமைக்கப்படும், இவற்றில் முதலாவது நிகழ்ச்சியானது சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள SMEகளை இலக்காகக் கொண்டு எல்ல பிரதேசத்தில்  நடைபெறவுள்ளது.

" பான் ஏசியா வங்கியில் நாங்கள் தொடர்ந்து எமது பொருளாதாரச் சூழலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கான வழிகளைத் தேடிக்கொண்டிருக்கிறோம். எனவே NCCSL உடனான இந்த ஒத்துழைப்பு இலங்கை முழுவதும் உள்ள SME தொழில் முயற்சியாளர்களுக்கு வலுவூட்ட இடமளிக்கிறது.. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒரு துடிப்பான மற்றும் நெகிழ்ச்சியான SME துறையின் எங்கள் பகிரப்பட்ட பார்வையை நனவாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது. SME கள் வளர்ந்து வரும் போட்டிச் சந்தையில் வெற்றிபெறத்  தேவையான கருவிகள் மற்றும் அறிவை வழங்குவதே எங்கள் குறிக்கோள்" என பான் ஏசியா வங்கியின்  பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான  நளீன் எதிரிசிங்க தெரிவித்தார்

NCCSL இன் தலைவர் தீபால் நெல்சன், "இலங்கையின் வர்த்தக சமூகத்தை குறிப்பாக SME துறையை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு NCCSL க்கு உள்ளது. எங்களின் நெருங்கிய பங்காளியான பான் ஏசியா வங்கியுடனான எங்கள் கூட்டானது தொழில்முனைவோரை வளர்ப்பதற்கும் வணிக வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும் நாங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. எமது வளங்களும் நிபுணத்துவமும் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு உச்சபட்ச ஆதரவை வழங்குவதுடன் அவர்கள் மத்தியில்  நேர்மறையான தாக்கத்தைக்  கொண்டு வரும் என நாங்கள் எதிர்பார்த்திருக்கிறோம்" என்று கூறினார்.

(இடமிருந்து வலமாக) : 

கிறிஸ்துமன் பொன்சேகா (சிரேஷ்ட முகாமையாளர்- கிளைக் கடன்), சிறிமேவன் செனவிரத்ன (சந்தைப்படுத்தல் தலைவர்), நிமல் ரத்நாயக்க (உதவி பொது முகாமையாளர் - கிளைக் கடன்), நளீன் எதிரிசிங்க (பான் ஏசியா வங்கியின்  பணிப்பாளர் / பிரதம நிறைவேற்று அதிகாரி நளீன் எதிரிசிங்க) NCCSL தீபால் நெல்சன் (தலைவர்), லக்மால் பெர்னாண்டோ (கௌரவ செயலாளர்), நிலுபுல் சந்திரசேன (செயலாளர் நாயகம்/ பிரதம நிறைவேற்று அதிகாரி) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right