இந்தியாவில் 18 வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி எட்டு மணி அளவில் தொடங்கியது. ஒன்பது மணி நிலவரப்படி பாஜக 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றிருக்கிறது.
ஏழு கட்டங்களாக நடைபெற்று நிறைவடைந்த இந்திய மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. எட்டு மணி அளவில் தொடங்கிய வாக்கு எண்ணிக்கையின் முதலாவதாக அஞ்சல் முறையில் பெறப்பட்ட வாக்குகள் எண்ணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து எட்டு முப்பது மணி அளவில் மின்னணு இயந்திரங்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது.
உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தபால் வாக்குகளில் முன்னிலை பெற்றிருக்கிறார்.
கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி தபால் வாக்குகளின் எண்ணிக்கையில் முன்னிலை பெற்று இருக்கிறார்.
காலை 9 மணி நிலவரம் படி 543 தொகுதிகளில் 512 தொகுதிகளில் முன்னிலை வெளியாகி இருக்கிறது இதில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 302 இடங்களிலும் இந்தியா கூட்டணி 170 இடங்களிலும் இதர கட்சிகள் 40 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.
தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 35 இடங்களிலும் பாஜக இரண்டு இடங்களிலும் அதிமுக ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM