(எம்.மனோசித்ரா)
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுவை இரத்து செய்வது குறித்து அவதானம் செலுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ள ஆலோசனை தேர்தலை நடத்தாமலிருப்பதற்காக அல்ல. மாறாக வேட்புமனு தாக்கலால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை தவிர்த்துக் கொள்ளவதற்காகவே இவ்வாறான ஆலோசனை வழங்கப்பட்டது என உள்ளுராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்பர தெரிவித்தார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் திங்கட்கிழமை (03) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்தாமலிருப்பதற்காக ஜனாதிபதியால் இந்த ஆலோசனை வழங்கப்படவில்லை. வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்படாமலிருப்பதால் அரச உத்தியோகத்தர்கள் உட்பட பல தரப்பினரும் எதிர்கொண்டுள்ள சிக்கல்கள் மற்றும் அசௌகரியங்களை கருத்திற் கொண்டே அதனை இரத்து செய்வது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்துள்ள அரச ஊழியர்கள் தற்காலிக இடமாற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. மேலும் சிலர் உயிரிழந்துள்ளனர். சிலர் கட்சி மாறியுள்ளனர். சிலர் அரசியலிலிருந்தே விலகியுள்ளனர். அது மாத்திரமின்றி ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. இதற்கு சிறந்த உதாரணம்.
அவர் கொழும்பு மாநாகரசபையின் மேயர் வேட்பாளராக வேட்புமனு செய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்தார். தற்போது மீண்டும் பதவியேற்றுள்ளார். ஆனால் அவரது வேட்புமனு அவ்வாறே உள்ளது. அதாவது அவர் வேட்பாராளராகவும் உள்ளார். பாராளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
அவ்வாறு இருப்பதற்கு சட்டத்தில் எவ்வித தடையும் இல்லை. ஆனால் அது சம்பிரதாயபூர்வமானதல்ல. இவ்வாறான சிக்கல்களை கருத்திற் கொண்டே வேட்புமனுவை இரத்து செய்யுமாறு பல தரப்பினரிடமிருந்தும் எமக்கு கோரிக்கைகள் கிடைத்துள்ளன. எவ்வாறிருப்பினும் தற்போது நீதிமன்றத்தில் 4 வழக்குகள் விசாரணையில் இருப்பதால் வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை எம்மால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM