கறுவாச் செய்கை தொடர்பான தகவல்கள் அடங்கிய கறுவாச் செய்கை வழிகாட்டி நூல் வெளியீட்டு விழா நிகழ்வு யாழ் மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம், திருநெல்வேலியில் எதிர்வரும் வியாழக்கிழமை (06) முற்பகல் 10 மணிக்கு நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் நூல் மதிப்பீட்டுரையினை வடகோவை வரதராஜன் (எழுத்தாளர்) ஆற்றவுள்ளார்.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சுகந்தினி செந்தில்குமரன் (மாகாண விவசாயப் பணிப்பாளர், வடக்கு மாகாணம்), அஞ்சனாதேவி சிறிரங்கன் (பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர், யாழ் மாவட்டம்), டாக்டர் விவியன் சத்தியசீலன் (தலைவர், சித்த மருத்துவ அலகு, யாழ்ப்பாண பல்கலைக்கழகம்) ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
கறுவாச் செய்கை தொடர்பான அனுபவ உரையினை கந்தையா பாஸ்கரன் நிகழ்த்தவுள்ளார்.
இந்நூல் வெளியீட்டாளர் சுந்தரமூர்த்தி புவனகுமார் கடந்த வருடம் கறுவாச் செய்கை தொடர்பான பல ஊக்குவிப்பு நடவடிக்கைகளை வட மாகாணப் பகுதிகளில் எடுத்திருந்தார்.
இவர் கறுவா விதைகளையும், கறுவா நாற்றுக்களையும் இலவசமாக வழங்கியிருந்ததுடன், கறுவாச் செய்கை தொடர்பான இலவச கருத்தரங்குகளையும் ஒழுங்கு செய்து நடத்தியிருந்தார்.
மாத்தறை மாவட்டத்தின் திஹகொடவில் அமைந்துள்ள ஏற்றுமதி விவசாயத் திணைக்கள கறுவா ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையத்தில் கறுவாச் செய்கையில் மேலதிக பயிற்சிகளை இலவசமாக பெற்றுக் கொடுப்பதற்கான நிதி அனுசரணையையும் வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
--
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM