Uber Springboard: இலங்கையில் வழிகாட்டல் திட்டத்துடன் தொடக்க நிலை வணிகங்களை வளர்க்கும் முயற்சி

03 Jun, 2024 | 04:42 PM
image

உலகளாவிய சவாரி சேவைகள் வழங்குனரும், உணவு மற்றும் மளிகைப்பொருட்களின் விநியோகத் தளமுமான Uber, நாட்டில் தொழில்முயற்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் முகமாக, இலங்கையில் தொடக்கநிலை வணிகங்களை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியான “Uber Springboard” என்பதை இன்று நடாத்தியுள்ளது.  இலங்கை அரசாங்கத்தின் தொழில்நுட்ப அமைச்சின் ஆதரவுடன், இந்தியாவிலுள்ள Uber இன் சிறப்பு மையத்திற்கு வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டமொன்றில் பங்கேற்பதற்கு பிரயாணிப்பதற்காக, தொழில்நுட்ப தொடக்க வணிகப் போட்டியின் மூலமாக 3 தொடக்கநிலை வணிகங்களை Uber தேர்ந்தெடுத்துள்ளது.   

DIGIECON 2030 இன் ஒரு அங்கமாக, Uber இன் தொழில்நுட்ப தலைவர்கள் 26 இலங்கை தொடக்கநிலை வணிகங்களுடன் இடைத்தொடர்பாடி, பின்னூட்டம் மற்றும் வழிகாட்டலை வழங்கியுள்ளனர். கடுமையான மதிப்பீட்டு நடைமுறையைத் தொடர்ந்து, Uber Springboard திட்டத்தின் நடுவர் குழாம். மேலதிக வழிகாட்டலை வழங்குவதற்காக KReader, ManKiwwa, மற்றும் Megic ஆகிய 3 தொடக்கநிலை வணிகங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.        

KReader | ஸ்தாபகர்: ஹெஷான் ஜே பீரிஸ்

இலங்கையில் உள்நாட்டு மொழிகளில், சந்தா அடிப்படையிலான டிஜிட்டல் வழி வாசிப்பு கட்டமைப்பினை இந்த தொடக்கநிலை வணிக முயற்சி வழங்குகின்றது. இது தனிப்பயனாக்கப்பட்ட மற்றும் உள்ளடக்கிய வாசிப்பு அனுபவங்களுக்காக இலத்திரனியல் நூல்கள் (eBook), ஓடியோ நூல்கள் (Audiobook), செயற்கை நுண்ணறிவு (AI) அடிப்படையில் உணர்வுகளுடன் கூடிய பேச்சுக்கான எழுத்து மற்றும் சைகை மொழிக்கான எழுத்து ஆகியவற்றை வழங்குகின்றது.  

ManKiwwa | ஸ்தாபகர்: ஷொஹான் களுசூரிய

குடிமைப் பிரச்சினைகள் தொடர்பில் தங்குதடையின்றி புகாரளிப்பதற்கு குடிமக்களை வலுவூட்டி, குடிமக்களுக்கும் அரசாங்க அதிகாரிகளுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்புகின்ற, மாற்றத்திற்கு வித்திடும் தளமொன்றை இம்முயற்சி வழங்குகின்றது.

Megic | ஸ்தாபகர்: யஷேன் ஆரியதிலக

16 வயது நிரம்பிய யஷேன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த தொடக்க வணிக முயற்சியானது தரமான கல்விக்கான அணுகலை ஜனநாயகப்படுத்தும் நோக்குடன், இலங்கையில் கணிதத்தை கற்றுக்கொள்வதை தனிப்பயனாக்கும் வகையில், புத்தாக்கமான, செயற்கை நுண்ணறிவால் முன்னெடுக்கப்படுகின்ற கல்வித் தொழில்நுட்பத் தளமாகும்.     

கொழும்பில் இதைக் காட்சிப்படுத்தும் வகையில் இடம்பெற்ற நிகழ்வில், கௌரவ அதிதியாக கலந்து சிறப்பித்த இலங்கை அரசாங்கத்தின், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் கலாநிதி தர்மசிறி குமாரதுங்க அவர்களுடன் தொடக்க வணிக முயற்சிகளின் ஸ்தாபகர்கள் தமது வரலாறுகளைப் பகிர்ந்து கொண்டனர். அமெரிக்க தூதரகத்தின் பொருளாதார அதிகாரியான அன்ட்ரூ ஷின், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் அமைப்பின் (ICTA) இணைப் பிரதம டிஜிட்டல் பொருளாதார அதிகாரியான சச்சிந்திர சமாரட்ண ஆகியோரும் இம்முயற்சிக்கு தமது ஆதரவை வழங்கியிருந்தனர்.   

இலங்கை அரசாங்கத்தின் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சரான கௌரவ கனக ஹேரத் அவர்கள் இம்முயற்சி குறித்து கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் தொடக்கநிலை வணிக முயற்சிகளுக்கு அங்கீகாரமளிப்பதில் Uber இன் மிகச் சிறந்த முயற்சிகளுக்காக அந்நிறுவனத்தை நான் பாராட்ட விரும்புகின்றேன். அதுவே ஒரு தொடக்கநிலை வணிக முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டு, இன்று சர்வதேச அளவில் தொழில்நுட்ப முன்னிலையாளராகத் திகழ்ந்து வருகின்ற நிலையில், இலங்கையின் புத்தாக்கத்தை வளர்ப்பதில் Uber காண்பிக்கும் அர்ப்பணிப்பு உண்மையில் போற்றத்தக்கது. தெலுங்கானா சர்வதேச செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்கு இந்த தொடக்கநிலை வணிக முயற்சிகளுக்கு விசேட அழைப்பு விடுத்துள்ள தெலுங்கானா அரசாங்கத்திற்கும் நான் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். அதிநவீன அறிவை வளர்த்துக் கொள்வதற்கான இத்தகைய அனுபவம் விலைமதிப்பற்றது. இதற்காக தேர்வு செய்யப்பட்ட தொடக்கநிலை வணிக முயற்சிகளான KReader Pvt Ltd, ManKiwwa by Deegenics Pvt Ltd, மற்றும் Megic Inc ஆகியவற்றுக்கு எனது பாராட்டுக்கள். தெலுங்கானா அரசாங்கம் மற்றும் Uber ஆகியன இணைந்து உங்களுக்கு வழங்கியுள்ள இந்த வாய்ப்புக்களை உச்ச அளவில் பயன்படுத்தி, வெற்றி காண்பதற்கு உங்களை வாழ்த்துகின்றேன்,” என்று குறிப்பிட்டார்.        

Uber Delivery - Sri Lanka இன் பொது முகாமையாளர் வருண் விஜேவர்த்தன அவர்கள் இந்நிகழ்வில் உரையாற்றுகையில், “தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் நேர்மறை மாற்றத்தை ஊக்குவிக்கும் அதன் சாத்தியம் ஆகியவற்றை Uber தெளிவாக இனங்கண்டுள்ளது. இலங்கையின் தொடக்கநிலை வணிக முயற்சிகள் அவற்றின் எதிர்காலம் தொடர்பில் திட்டமிட்டு, வலுவான அத்திவாரமொன்றைக் கட்டியெழுப்ப அவர்களை தயார்படுத்தும் வகையில் அவற்றுக்கு நிபுணத்துவ வழிகாட்டல், ஆலோசனை மற்றும் சர்வதேச அனுபவம் ஆகியவற்றை நாம் இம்முயற்சியினூடாக வழங்க விரும்புகின்றோம். எமக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ள தொழில்நுட்ப அமைச்சிற்கு நாம் நன்றி தெரிவிப்பதுடன், நாட்டில் அடுத்த தலைமுறை தொழில் முயற்சியாளர்களுக்கு உதவுவதில் பெருமை கொள்கின்றோம்,” என்று குறிப்பிட்டார்.

Uber Mobility - Sri Lanka இன் இலங்கைக்கான முகாமையாளர் கௌஷல்யா அவர்கள் இம்முயற்சி குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்கையில், “புத்தாக்கத்தில் Uber எப்போதும் முன்னின்று செயற்பட்டு வருவதுடன், தொழில்துறைகளில் பற்பல தொழில்நுட்ப சிறப்பம்சங்களை முதன்முதலாக அறிமுகப்படுத்திய நிறுவனம் என்ற பெருமையுடன் ஒரு தசாப்தத்திற்கு மேலாக சிறந்ததொரு முன்னுதாரணமாகத் திகழ்ந்து வருகின்றது. மாற்றத்தைத் தோற்றுவிக்கும் உத்வேகத்தைக் கொண்டுள்ள, சாதிக்கத்துடிக்கும் வளர்ந்து வருகின்ற தொடக்கநிலை வணிக முயற்சிகள், இந்தியாவில் Uber அணிகளை சந்தித்து, அவர்களுடைய ஆலோசனைகளை நேரடியாகப் பெற்றுக்கொள்வதன் மூலமாக பெரும் பயனடையவுள்ளன,” என்று குறிப்பிட்டார்.       

இலங்கையில் தொடக்கநிலை வணிக முயற்சிகளுக்கு உதவுவதில் Uber தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது. இரு ஆண்டுகளுக்கு முன்னர் Uber தொழில்முயற்சியாண்மை சவால் (Uber Entrepreneurship Challenge) என்பதை இந்நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Uber நாட்டில் தனது அடிச்சுவட்டை தொடர்ந்தும் விரிவுபடுத்தி வருகின்ற நிலையில், Uber Springboard போன்ற முயற்சிகள் உள்நாட்டு திறமைசாலிகள் மத்தியில் தொழில்முயற்சியாண்மையை வளர்த்து, அவர்களுக்கு வலுவூட்டுவதில் Uber இன் அர்ப்பணிப்புக்கு சான்றாக உள்ளன.   

Uber தொடர்பான விபரங்கள் 

நகர்வின் மூலமாக வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதே Uber இன் இலக்கு. பொத்தான் ஒன்றை அழுத்துவதன் மூலமாக சவாரியொன்றை எவ்வாறு இலகுவாக மேற்கொள்ள முடியும் என்ற எளிய பிரச்சனைக்கான தீர்வை வழங்குவதற்காக 2010 ஆம் ஆண்டளவில் எமது சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 25 பில்லியனுக்கும் மேற்பட்ட சவாரிகளுடன், மக்களுக்கு தாங்கள் விரும்புகின்றவற்றை தமக்கு அருகிலேயே பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புக்களை நாம் கட்டியெழுப்பியுள்ளோம். நகரங்கள் மத்தியில் எவ்வாறு மக்கள், உணவு மற்றும் பொருட்கள் நகர்கின்றன என்பதை மாற்றியமைத்து, புதிய வாய்ப்புக்களுக்கு வழிகோலுகின்ற ஒரு தளமாக Uber மாறியுள்ளது. இலங்கையில் 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட Uber Rides சேவை, 40 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விரிவடைந்துள்ளதுடன், பன்முகப்பட்ட சேவைகள் மற்றும் தீர்வுகளுடன் தளத்தில் மேம்பட்ட அனுபவத்தையும் வழங்குகின்றது.

இடமிருந்து வலப்புறமாக - அன்ட்ரூ ஷின், பொருளாதார அதிகாரி, அமெரிக்க தூதரகம், வருண் விஜேவர்த்தன - பொது முகாமையாளர், Uber Delivery, ஹெஷான் ஜே பீரிஸ் - ஸ்தாபகர், Kreader, கலாநிதி தர்மசிறி குமாரதுங்க - செயலாளர், தொழில்நுட்ப அமைச்சு, இலங்கை அரசாங்கம், ஷொஹான் களுசூரிய - ஸ்தாபகர், ManKiwwa, யஷேன் ஆரியதிலகவின் சார்பில், ஸ்தாபகர், Megic Inc அபித் லத்தீஃப், தொடக்கநிலை வணிக முயற்சிகளுடனான ஈடுபாடுகளுக்கான தலைவர், ICTA, சஞ்சய் சாதா - பொதுக் கொள்கை மற்றும் அரசாங்க விவகாரங்களுக்கான பணிப்பாளர், Uber தெற்காசியா, கௌஷல்யா குணரட்ன, இலங்கைக்கான முகாமையாளர், Uber Mobility - Sri Lanka.           

முக்கிய செய்திகள்

icon-left
icon-right