இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் கலைஞர் கருணாநிதி : ராகுல் காந்தி

Published By: Digital Desk 7

03 Jun, 2024 | 04:49 PM
image

''இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி'' என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னணி தலைவருமான ராகுல் காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும்  சிறப்பாக கொண்டாடப்படுகிறது. 

இதன் ஒரு பகுதியாக புது தில்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் கலைஞர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி ராஜா, திமுக கட்சியின் முன்னணி மற்றும் மூத்த நிர்வாகிகளான திருச்சி சிவா, டி. ஆர். பாலு உள்ளிட்ட பலர் பங்குபற்றினர்.

கலைஞர் கருணாநிதியின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய புகைப்படங்களை தன்னுடைய எக்ஸ் தளத்தில் ராகுல் காந்தி பதிவிட்டிருக்கிறார். அதனுடன்

'' தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் மு கருணாநிதியின் பிறந்த நாளில் அவருக்கு நெஞ்சார்ந்த அஞ்சலிகள்.

தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு தலைவர். சமூக நீதியை மேம்படுத்துவதிலும், பொருளாதார சமத்துவத்தை முன்னேற்றுவதிலும், தமிழக மற்றும் தமிழ் மக்களின் மொழி கலாச்சாரத்தை பாதுகாக்கவும் பாடுபட்டவர்.

அவரது வாழ்க்கை நாடு முழுவதும் எண்ணற்ற மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது'' என பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இதனிடையே மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு. க. ஸ்டாலின், அவருடைய கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் அமைச்சர் பெருமக்களுடன் வருகை தந்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொலிவியாவில் கோர விபத்து ; 30...

2025-02-18 16:23:00
news-image

பாலஸ்தீனியர்கள் என நினைத்து இஸ்ரேலை சேர்ந்தவர்கள்...

2025-02-18 14:44:05
news-image

சர்ச்சைக்குரிய பிரபல யூடியூப்பர் ரன்வீர் அல்லாபாடியாவுக்கு...

2025-02-18 14:59:48
news-image

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி.. விஷத்தைச்...

2025-02-18 14:37:48
news-image

“ஐரோப்பா புட்டின் டிரம்ப் அச்சிற்கு சவால்...

2025-02-18 12:25:23
news-image

கர்நாடகாவில் 15 வயது சிறுவன் சுட்டதில்...

2025-02-18 13:23:52
news-image

கனடாவில் தலைகீழாக கவிழ்ந்த விமானம் -...

2025-02-18 08:57:01
news-image

வியட்நாமில் நடைபெறும் இரண்டாவது உலகத் தமிழர்...

2025-02-18 09:32:42
news-image

அமெரிக்கா வழங்கிய எம்கே84 குண்டுகள் இஸ்ரேலை...

2025-02-17 12:46:28
news-image

உக்ரைனிற்கு பிரிட்டிஸ் படையினரை அனுப்பதயார் -...

2025-02-17 10:38:31
news-image

ஐரோப்பாவிற்கான இராணுவம் அவசியம் - உக்ரைன்...

2025-02-16 13:43:37
news-image

ஐரோப்பாவை தவிர்த்துவிட்டு உக்ரைன் குறித்து அமெரிக்க...

2025-02-16 13:41:32